#லைவ் அப்டேட்ஸ்: ரஷியாவை கட்டுபடுத்த அதி நவீன ஈகிள் டிரோன்களை விற்பனை செய்யும் அமெரிக்கா


தினத்தந்தி 1 Jun 2022 9:37 PM GMT (Updated: 2 Jun 2022 12:02 PM GMT)

ரஷிய படைகளை எதிர்கொள்ள உக்ரைனுக்கு அதிநவீன ஏவுகணைகளை அமெரிக்கா வழங்குகிறது.


Live Updates

  • 2 லட்சம் குழந்தைகளை கடத்திய ரஷியா - உக்ரைன் அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு
    2 Jun 2022 12:02 PM GMT

    2 லட்சம் குழந்தைகளை கடத்திய ரஷியா - உக்ரைன் அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு

    உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷியா, இதுவரை 2 லட்சம் குழந்தைகளை கடத்தியுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். மக்களிடம் காணொளி மூலம் உரையாற்றிய அவர், ‘கடத்தப்பட்ட குழந்தைகள் ரஷியாவில் பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். இது சட்டவிரோத செயலாகும். மேலும் இதுவரை 261 குழந்தைகள் ரஷிய போரினால் கொல்லப்பட்டுள்ளனர்’ என்று கூறினார்.

  • 2 Jun 2022 10:29 AM GMT

    ரஷியாவை கட்டுபடுத்த அதி நவீன ஈகிள் டிரோன்களை விற்பனை செய்யும் அமெரிக்கா

    வாஷிங்டன்

    ரஷிய-உக்ரைன் போர் இன்றுடன் 102-வது நாளை எட்டுகிறது. இந்த நிலையில் கிழக்கு உக்ரைனில் ரஷிய படைகளை எதிர்கொள்ள உக்ரைனுக்கு உயர் தொழில்நுட்பம் கொண்ட அதிநவீன ஏவுகணை அமைப்புகளை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

    700 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.5,421 கோடி) மதிப்பிலான ஆயுத தொகுப்பு உக்ரைனுக்கு வழங்கப்பட இருப்பதாக ஜோ பைடன் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் இருவர் தெரிவித்தனர்.

    உக்ரைன் போரில் ரஷிய படைகளை எதிர்கொள்ள உக்ரைனுக்கு உயர் தொழில் நுட்பம் கொண்ட அதிநவீன ஏவுகணை அமைப்புகளை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

    பயங்கரமான எம்கியூ -1சி கிரே ஈகிள் டிரோனை உக்ரைனுக்கு விற்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.இவை ரஷியாவிற்கு எதிரான போரில், இவைகள் ஹெல்ஃபயர் ஏவுகணைகளுடன் பொருத்தப்படலாம்.ஜெனரல் அட்டாமிக்ஸ் இந்த டிரோனை உருவாக்கியுள்ளது.

    ரஷியாவிற்கு எதிராக உக்ரைன் பல குறுகிய தூர டிரோன்களைப் பயன்படுத்துகிறது. ஏரோவிரோன்மென்ட்டின் ஆர்கியூ-20 பூமா ஏயூ மற்றும் துருக்கியின் பேயார்க்தர் -டிபி 2 ஆகியவை இதில் அடங்கும். ஆனால் அமெரிகாவின் கிரே ஈகிள் லின் தொழில்நுட்பம் அனைத்தையும் விட சிறந்தது. ஏனெனில் இவை 30 அல்லது அதற்கு மேற்பட்ட மணிநேரம் பறக்க முடியும். இது தவிர, அவைகள் பெரிய அளவிலான தரவுகளை சேகரிக்க முடியும். இது மட்டுமின்றி, இந்த ஆளில்லா விமானம் எட்டு ஹெல்ஃபயர் ஏவுகணைகளையும் சுமந்து செல்லும் திறன் கொண்டது.இவை அவை வெகு தொலைவு சென்று தாக்கும் திறன் கொண்டவை ஆகும்

    டிரோன் நிபுணர் டான் கேட்டர் கூறுகையில், எம்கியூ -1சி கிரே ஈகிள் டிரோன் அளவு பெரியது. இதன் எடை துருக்கியின் பேயார்க்தர் -டிபி 2 ஐ விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம். இது தவிர, அதன் ஆயுதம் தாங்கும் திறன் மற்றும் வீச்சு மற்ற டிரோன்களை விட சிறப்பாக உள்ளது. பேயார்க்தர் -டிபி 2 டிரோன் 22 கிலோ துருக்கிய ஏவுகணை எம்ஓஎம் -எல் உடன் ஆயுதம் ஏந்தியிருக்கிறது, இது ஹெல்ஃபயரின் எடையில் பாதி எடை கொண்டது. இது வானத்தில் மிக நீண்ட விமானம் பறக்க முடியும் என கூறினார்.

  • உக்ரைனுடன் 100 நாளை கடந்த போர்  ரஷியாவின் சிறப்பு அணு ஆயுதப்படை தீவிர போர் பயிற்சி
    2 Jun 2022 5:11 AM GMT

    உக்ரைனுடன் 100 நாளை கடந்த போர் ரஷியாவின் சிறப்பு அணு ஆயுதப்படை தீவிர போர் பயிற்சி

    உக்ரைனுக்கு எதிரான ரஷிய போர் 100 நாட்களை கடந்து உள்ளது. இந்த நிலையில் உக்ரைனின் கிழக்குப் பகுதி நகரங்களை கைப்பற்றும் முயற்சியில் ரஷிய படைகள் தீவிரம் காட்டி வருகின்றன.

    ரஷியாவின் இந்த தீவிர தாக்குதல் வேகத்தை கட்டுப்படுத்த உலக நாடுகள் உதவவேண்டும் என்ற உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், 700 மில்லியன் டாலர் மதிப்புள்ள ராக்கெட் ஏவுகணை மற்றும் வெடிமருந்துகள் அடங்கிய பாதுகாப்பு உதவி தொகுப்பை அறிவித்துள்ளார்.

    ரஷியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள இவானோவோ மாகாணத்தில் ரஷியாவின் சிறப்பு அணுஆயுதப் படைகள் தீவிர போர் பயிற்சில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் இந்த போர் பயிற்சியில், 1000 வீரர்கள் வரை ஈடுபட்டு இருப்பதாகவும், இதில் 100 வாகனங்கள் முதல் ”யார்ஸ்” எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஆகியவை இடம்பெற்று இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 2 Jun 2022 12:31 AM GMT

    ரஷிய ராணுவத்தின் ஏவுகணை தாக்குதலில் 5 பேர் காயம் - லிவிவ் ஒப்லாஸ்ட் கவர்னர் தகவல்

    எல்விவ் ஒப்லாஸ்டின் ஸ்ட்ரைஸ்கி மாவட்டத்தில் கப்பல் ஏவுகணைத் தாக்குதலால் காயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையில் இல்லை என்று அம்மாநில கவர்னர் மக்சிம் கோசிட்ஸ்கி கூறினார். மேலும் இதுதொடர்பான தகவல்கள் காலையில் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

  • 1 Jun 2022 11:22 PM GMT


    கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்றும் நோக்கில் ரஷிய படைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன. இதனால் போர் மீண்டும் உக்கிரமடைந்து வருகிறது.

    உக்ரைனின் உற்பத்தி மையமாக திகழும் தொழில் நகரமான செவிரோடொனெட்ஸ்க் நகரில் ரஷிய படைகள் வேகமாக முன்னேறி கொண்டிருக்கின்றன. இதே வேகத்தில் சென்றால் ஓரிரு நாட்களில் அந்த நகரம் முழுவதும் ரஷிய படைகளின் கட்டுப்பாட்டுகள் வந்துவிடும்.

    அதிநவீன ஏவுகணை அமைப்பு

    அந்த நகரில் ரஷிய படைகள் 24 மணி நேரமும் குண்டு வீச்சில் ஈடுபட்டு வருவதால் அந்த நகரம் உக்ரைனின் மற்றொரு மரியுபோல் நகரமாக மாறி வருவதாக அதிகாரிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

    செவிரோடொனெட்ஸ்க் மட்டும் இன்றி கிழக்கு உக்ரைனில் உள்ள பல நகரங்களிலும் ரஷிய படைகளின் தாக்குதல் நாளுக்கு நாள் வேகமெடுத்து வருவதால் விவரிக்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமாகி வருவதாக அதிகரிகள் கூறுகின்றனர்.

    இந்த நிலையில் கிழக்கு உக்ரைன் போரில் ரஷிய படைகளை எதிர்கொள்ள உக்ரைனுக்கு உயர் தொழில் நுட்பம் கொண்ட அதிநவீன ஏவுகணை அமைப்புகளை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

  • 1 Jun 2022 10:45 PM GMT

    ஸ்காட்லாந்தை வீழ்த்தி உக்ரைன் உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை நெருங்கி உள்ளது.

    நேற்று பிளே-ஆஃப் அரையிறுதியில் உக்ரைனின் கால்பந்து அணி ஸ்காட்லாந்தை 3:1 என்ற கணக்கில் வென்றது. அந்த அணி ஜூன் 5-ஆம் தேதி பிளே-ஆஃப் இறுதிப் போட்டியில் வேல் அணியை எதிர்கொள்கிறது.

  • 1 Jun 2022 10:06 PM GMT


    மைக்கோலேவில் ரஷியப் படைகளால் நேற்று 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.

    ரஷியப் படைகள் இரண்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களையும் நான்கு தனியார் வீடுகளையும் சேதப்படுத்தியதாக மைக்கோலேவின் மேயர் ஒலேக்சண்டர் தெரிவித்துள்ளார்.

  • 1 Jun 2022 9:38 PM GMT


    ரஷிய-உக்ரைன் போர் நாளையுடன் 100-வது நாளை எட்டுகிறது. இந்த நிலையில் கிழக்கு உக்ரைனில் ரஷிய படைகளை எதிர்கொள்ள உக்ரைனுக்கு உயர் தொழில்நுட்பம் கொண்ட அதிநவீன ஏவுகணை அமைப்புகளை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர், புதிய ஏவுகணைகள், முக்கிய இலக்குகளை இன்னும் துல்லியமாக தாக்க உதவும் என்றார்.

    700 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.5,421 கோடி) மதிப்பிலான ஆயுத தொகுப்பு உக்ரைனுக்கு வழங்கப்பட இருப்பதாக ஜோ பைடன் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் இருவர் தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில், ‘இந்த ஆயுத தொகுப்பில் ‘எம்142 ஹிமார்ஸ்’ என்கிற அதிநவீன ஏவுகணை அமைப்பும் அடங்கும். இதன் மூலம் 70 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் பல ஏவுகணைகளை ஒரேசமயத்தில் ஏவ முடியும். இதுதவிர நவீன ஹெலிகாப்டர்கள், பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் பிற ராணுவ தளவாடங்களின் உதிரி பாகங்கள் ஆகியவையும் வழங்கப்படுகின்றன’ என்றனர்.


Next Story