#லைவ் அப்டேட்ஸ்: கிழக்கு உக்ரைனில் ரஷியா தொடர்ந்து தாக்குதல் - 12 பேர் பலி


#லைவ் அப்டேட்ஸ்: கிழக்கு உக்ரைனில் ரஷியா தொடர்ந்து தாக்குதல் - 12 பேர் பலி
x

Image Courtesy: AFP

தினத்தந்தி 7 July 2022 12:02 AM GMT (Updated: 7 July 2022 6:30 AM GMT)

உக்ரைன் - ரஷியா இடையேயான போர் 134-வது நாளாக நீடித்து வருகிறது.

கீவ்,

Live Updates

  • 7 July 2022 6:30 AM GMT


    டொனெட்ஸ்கில் ரஷிய படைகள் சிறிய முன்னேற்றம் அடைந்துள்ளன - இங்கிலாந்து தகவல்

    டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் முன் வரிசையில் கடுமையான குண்டுவீச்சு தாக்குதல்கள் நிகழ்ந்தன, ஆனாலும் ரஷியப் படைகள் சில முன்னேற்றங்களைச் சந்தித்துள்ளன என்று இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மேலும் லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் கடந்த வார பயிற்சிகளில் ஈடுபட்ட ரஷியப் பிரிவுகள் "மறுசீரமைப்பதில்" ஈடுபட்டதன் காரணமாக இது இருக்கலாம் என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

  • 7 July 2022 5:35 AM GMT

    ரஷிய ஆக்கிரமிப்பு ஸ்காடோவ்ஸ்கில் குண்டுவெடிப்புகள் பதிவாகியுள்ளன.

    இதுதொடர்பாக ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கெர்சன் பிராந்தியத்தில் உள்ள தெற்கு துறைமுக நகரமான ஸ்காடோவ்ஸ்கின் மேயர் ஓலெக்சாண்டர் யாகோவ்லீவ் கூறுகையில், “நேற்றைய தாக்குதலின் விளைவாக ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்” என்று அவர் தெரிவித்தார்.

    இதனிடையே நகரின் வடக்குப் பகுதியை குறிவைத்து மூன்று ஏவுகணைகள் தாக்கியதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

  • 7 July 2022 4:30 AM GMT


    ஜி20 கூட்டத்தை ஒரு மேடையாகப் பயன்படுத்த ரஷியாவை அனுமதிக்க முடியாது: ஜெர்மனியின் வெளியுறவுத்துறை மந்திரி

    உக்ரைனில் அதன் போரைக் கருத்தில் கொண்டு, ஜி20 கூட்டத்தை ஒரு மேடையாகப் பயன்படுத்த ரஷியாவை அனுமதிக்கக் கூடாது என்று ஜெர்மனியின் வெளியுறவுத்துறை மந்திரி அன்னலெனா பேர்பாக் தெரிவித்துள்ளார்.

    மேலும் சர்வதேச சட்டம் மதிக்கப்படுவதையும், கடைப்பிடிக்கப்படுவதையும் உறுதிசெய்வது நம் அனைவரின் நலனிலும் உள்ளது என்றும் அதுதான் பொதுவான அம்சம் என்றும் அவர் கூறினார்.

  • 7 July 2022 3:33 AM GMT


    கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மாகாணத்தை கைப்பற்ற ரஷிய படைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளன.

    டான்பாஸ் பிராந்தியத்தில் உள்ள மற்றொரு மாகாணமான டொனெட்ஸ்க் மீது ரஷிய படைகளின் பார்வை திரும்பியுள்ளது. அந்த மாகாணத்தில் ஸ்லோவியன்ஸ்க், அவ்டிவ்கா, குராஸ்னோரிவ்காவ் மற்றும் குராகோவ் ஆகிய 4 நகரங்கள் அரசு படைகளின் வசம் உள்ளன.

    ஒரே சமயத்தில் அந்த 4 நகரங்கள் மீதும் ரஷிய படைகள் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளன. அந்த நகரங்கள் மீது ரஷிய படைகள் இரவு, பகல் பாராமல் தொடர்ச்சியாக பீரங்கி குண்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசி வருவதாக மாகாண கவர்னர் பாவ்லோ கைரிலென்கோ குற்றம் சாட்டியுள்ளார்.

    அந்த வகையில் டொனெட்ஸ்க் மாகாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் நேற்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அப்பாவி பொதுமக்கள் 5 பேர் கொல்லப்பட்டதாகவும், 21 பேர் காயமடைந்ததாகவும் அவர் கூறினார்.

    ரஷிய படைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருவதால் டொனெட்ஸ்க் மாகாணத்தில் வசிக்கும் 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களை உடனடியாக வெளியேறுமாறு பாவ்லோ கைரிலென்கோ வலியுறுத்தி உள்ளார்.

    இதனிடையே உக்ரைனின் 2-வது மிகப்பெரிய நகரமான கார்கிவ் மீதும் ரஷிய படைகள் தாக்குதல்களை விரிவுப்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  • 7 July 2022 2:30 AM GMT


    லுஹான்ஸ்க் மாகாணம் முழுவதுமாக ரஷிய படைகளிடம் வீழ்ந்தது

    உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி போர் தொடுத்தது. போர் தொடங்கி 4 மாதங்களை கடந்த பின்னரும் போரின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. இந்த போரில் தற்போது கிழக்கு உக்ரைனை கைப்பற்றுவதை முக்கிய இலக்காக கொண்டு ரஷிய படைகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

    கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் பெரும்பாலான நகரங்கள் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் சூழலில், உக்ரைன் படைகளின் வசம் இருக்கும் நகரங்களை கைப்பற்ற ரஷிய படைகள் தீவிரம் காட்டி வருகின்றன.

    அந்த வகையில் டான்பாஸ் பிராந்தியத்தின் லுஹான்ஸ்க் மாகாணத்தில் அரசு படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த செவெரோடொனட்ஸ்க் மற்றும் லிசிசான்ஸ்க் ஆகிய இரு நகரங்களையும் அண்மையில் ரஷிய ராணுவம் கைப்பற்றியது. இதன் மூலம் லுஹான்ஸ்க் மாகாணம் முழுவதுமாக ரஷிய படைகளிடம் வீழ்ந்தது.

  • 7 July 2022 1:30 AM GMT

    உக்ரைனில் 'நவ நாசிசம்' பற்றி விவாதிக்க ரஷியா முறைசாரா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை தொடங்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

  • 7 July 2022 12:02 AM GMT

    உக்ரைன் மீது ரஷியா 134-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதனால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இதனிடையே, உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள லூகன்ஸ் மாகாணம் முழுவதையும் ரஷியா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து லூகன்ஸ் மாகாணத்திற்கு அடுத்த நகரங்களிம் ரஷியா தாக்குதலை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது.

    இந்நிலையில், உக்ரைனின் கிழக்கு நகரமான டொனெட்ஸ்க் மாகாணத்தில் ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் இன்று 12 பேர் உயிரிழந்தனர். ரஷியா நடத்திய தாக்குதலில் 8 உக்ரைன் பாதுகாப்பு படையினர் உயிரிழந்தனர். அதேவேளை உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடந்து நீடித்து வருவதால் பதற்றமான சூழ்நிலை உருவாகி வருகிறது.


Next Story