ஈரானில் போர் விமானம் விழுந்து விபத்து; விமானிகள் இருவர் உயிரிழப்பு


ஈரானில் போர் விமானம் விழுந்து விபத்து; விமானிகள்  இருவர் உயிரிழப்பு
x

தலைநகர் தெஹ்ரானுக்கு தெற்கே அமைந்துள்ள இஸ்ஃபஹான் மாகாணத்தில் தான் இந்த விபத்து நேரிட்டுள்ளது.

தெஹ்ரான்,

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானில் போர் விமானம், பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயற்சி விமானிகள் இருவர் உயிரிழந்தனர். தலைநகர் தெஹ்ரானுக்கு தெற்கே அமைந்துள்ள இஸ்ஃபஹான் மாகாணத்தில் தான் இந்த விபத்து நேரிட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து கண்டறிய விசாரணையை தொடங்கியிருப்பதாக அந்நாட்டு விமானப்படை தெரிவித்துள்ளது.

ஈரானில், விமானப்படை விமானங்கள் முறையான பராமரிப்பு இன்றியும் மிகவும் பழமையானதாகவும் உள்ளது. இதனால், அங்கு இத்தகைய விபத்துக்கள் அடிக்கடி நடப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் ஈரானின் எப் 5 ரக போர் விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில் 3 பேர் உயிரிழந்த சோகம் நடந்தது. ஈரானிடம் சோவியத் காலகட்டத்தில் ரஷியாவிடம் இருந்து வாங்கப்பட்ட மிக் மற்றும் சுகோய் போர் விமானங்கள் உள்ளன. சில சீன போர் விமானங்களும் உள்ளன.


Next Story