சிரியாவில் துருக்கி விமானங்கள் குண்டுமழை ஐ.எஸ். அமைப்பினர் 20 பேர் கொன்று குவிப்பு


சிரியாவில் துருக்கி விமானங்கள் குண்டுமழை ஐ.எஸ். அமைப்பினர் 20 பேர் கொன்று குவிப்பு
x
தினத்தந்தி 15 Dec 2016 10:30 PM GMT (Updated: 2016-12-16T02:04:27+05:30)

சிரியாவின் வடக்கு பகுதியில் ஐ.எஸ். அமைப்பினர் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய பகுதிகளில் துருக்கி அவ்வப்போது போர் விமானங்களை அனுப்பி குண்டுமழை பொழிந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் இப்போதும் துருக்கி போர் விமானங்கள் அந்தப் பகுதியில் குண்டு மழை பொழ

அங்காரா,

சிரியாவின் வடக்கு பகுதியில் ஐ.எஸ். அமைப்பினர் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய பகுதிகளில் துருக்கி அவ்வப்போது போர் விமானங்களை அனுப்பி குண்டுமழை பொழிந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில் இப்போதும் துருக்கி போர் விமானங்கள் அந்தப் பகுதியில் குண்டு மழை பொழிந்தன. இந்த தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஐ.எஸ். அமைப்பினர் 20 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலின்போது ஐ.எஸ். அமைப்பினரின் 7 கட்டிடங்கள் நாசமாக்கப்பட்டன. அத்துடன் அந்த அமைப்பினரின் தளம் ஒன்றும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்கள் ஐ.எஸ். அமைப்பினருக்கு பலத்த அடியாக அமைந்துள்ளன.


Next Story