உலகைச்சுற்றி


உலகைச்சுற்றி
x
தினத்தந்தி 15 Dec 2016 10:45 PM GMT (Updated: 2016-12-16T02:09:27+05:30)

* தென் கொரிய அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், ஜனநாயக கட்சியின் தலைவருமான மூன் ஜா இன் அறிவித்துள்ளார். இது தனக்கு மிகவும் கவுரவமானது என்று அவர் கூறி உள்ளார். * அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், நியூயார்க்கில் உள்ள டிரம்ப் டவ

* தென் கொரிய அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், ஜனநாயக கட்சியின் தலைவருமான மூன் ஜா இன் அறிவித்துள்ளார். இது தனக்கு மிகவும் கவுரவமானது என்று அவர் கூறி உள்ளார்.

* அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், நியூயார்க்கில் உள்ள டிரம்ப் டவரில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சத்ய நாதெல்லா உள்ளிட்ட சிலிக்கான் வேலி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்து பேசினார். அப்போது அவர்களிடம் டிரம்ப், “நான் உங்களுக்கு உதவுவதற்கு இங்கு உள்ளேன். நன்றாக செயல்படுங்கள்” என ஊக்குவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டார்.

*அமெரிக்க வெளியுறவு மந்திரி பதவிக்கு டிரம்பினால் தேர்வு செய்யப்பட்டுள்ள டில்லர்சன் ஓய்வு பெறப்போவதை அடுத்து, எக்ஸான் மொபில் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு டேரன் உட்ஸ் வரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரிடம் டில்லர்சன் பொறுப்புகளை ஒப்படைப்பார்.

* சீனா தனது இறையாண்மையையும், பிரதேச ஒருமைப்பாட்டையும் சார்ந்துள்ள விஷயங்களில் அமெரிக்காவிடம் ஒருபோதும் பேரம் பேசாது என அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்புக்கு, அமெரிக்காவுக்கான சீன தூதர் குர் டியாங்கய் உணர்த்தி உள்ளார்.

Next Story