அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் மேயராக தேர்வு


அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் மேயராக தேர்வு
x
தினத்தந்தி 16 Dec 2016 11:34 PM GMT (Updated: 16 Dec 2016 11:34 PM GMT)

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள முக்கிய நகரம் குப்பெர்டினோ. அமெரிக்காவில் கல்வியில் சிறந்து விளங்கக்கூடிய சிறிய நகரங்களின் இதுவும் ஒன்று. உலகப்புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் தலைமையகம் இங்குதான் உள்ளது. இத்தகைய சிறப்பு மிக்க இந்த நகரின் மேயரா

வாஷிங்டன்,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள முக்கிய நகரம் குப்பெர்டினோ. அமெரிக்காவில் கல்வியில் சிறந்து விளங்கக்கூடிய சிறிய நகரங்களின் இதுவும் ஒன்று. உலகப்புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் தலைமையகம் இங்குதான் உள்ளது.

இத்தகைய சிறப்பு மிக்க இந்த நகரின் மேயராக முதன் முறையாக இந்திய வம்சாவளி பெண்ணான சவிதா வைத்தியநாதன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இவர் அமெரிக்க குடியுரிமை பெற்று குப்பெர்டினோ நகரில் 19 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார். எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் அங்கு உள்ள ஒரு பள்ளியில் கணித ஆசிரியையாக பணியாற்றி உள்ளார். அதன் பின்னர் தனியார் வங்கி ஒன்றில் அதிகாரியாக பணியாற்றிய சவிதா வைத்தியநாதன் அந்த நகரில் பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு உள்ளார்.

கடந்த வாரம் குப்பெர்டினோ நகரின் புதிய மேயராக அவர் பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழாவில் இந்தியாவில் வசித்து வரும் சவிதாவின் தாயார் கலந்துகொண்டார்.

இது குறித்து சவிதா வைத்தியநாதன் கூறுகையில், ‘‘குப்பெர்டினோ நகரில் இருந்து இந்திய வம்சாவளியின் முதல் பெண் மேயராக நான் தேர்வுசெய்யப்பட்டதற்காக எனக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிகின்றன. ஆம் நான் இதில் அதிக பெருமை மற்றும் கவுரவம் கொள்கிறேன். இனவேறுபாடு பார்க்காமல் எனக்கு வாக்களித்த குப்பெர்டினோ நகர மக்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன்’’ என தெரிவித்தார்.


Next Story