சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் எந்த திருத்தத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்: பாகிஸ்தான் சொல்கிறது

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் எந்த திருத்தத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்:  பாகிஸ்தான் சொல்கிறது
x
தினத்தந்தி 17 Dec 2016 7:29 AM GMT (Updated: 2016-12-17T12:59:41+05:30)

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தமானது 58 ஆண்டுகள் பழமையானது. இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவு நீரை மட்டும்தான் பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்கி வந்தது. இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் நீரின் அளவைக் குறைக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதை உறுதி செய்யும் வகையில், அண்மையில் பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்த்தில் உள்ள வேறுபாடுகள் மறு ஆய்வு செய்யப்பட்டு தீர்வு காணப்படும் என்று இந்தியா தெரிவித்தது.

இஸ்லமபாத்,

சிந்து நதி நீர் ஒப்பந்ததில் எந்த மாற்றமோ, திருத்தமோ மேற்கொள்வதை அனுமதிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. 

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தமானது 58 ஆண்டுகள் பழமையானது. இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவு நீரை மட்டும்தான் பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்கி வந்தது. இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் நீரின் அளவைக் குறைக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதை உறுதி செய்யும் வகையில், அண்மையில் பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர்  ஒப்பந்த்தில் உள்ள வேறுபாடுகள் மறு ஆய்வு செய்யப்பட்டு தீர்வு காணப்படும் என்று இந்தியா தெரிவித்தது. 

இந்த நிலையில், சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து பாகிஸ்தான் பிரதமரின் சிறப்பு  உதவியாளர் கூறுகையில், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ள பாகிஸ்தான் அனுமதிக்காது. எங்களின் நிலைப்பாடானது ஒப்பந்தத்தின் புனிதத்தை காப்பதுதான்” என்று தெரிவித்துள்ளார். 

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் விவரம்:-

இந்தியாவின் முதல் பிரதமரான நேரு, பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் அயூப் கான் தலைமையில் சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் கடந்த 1960-ம் ஆண்டு கையெழுத்தானது. அதன்படி இந்தியாவில் இருந்து பாயும் ஜீலம், செனாப், சட்லெஜ், சிந்து, பீஸ் மற்றும் ராவி ஆகிய ஆறு நதிகள் இணைக்கப்பட்டு அதில் இருந்து 80 சதவீத நீர் பாகிஸ்தானுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. எஞ்சிய 20 சதவீத நீரை மட்டுமே இந்தியா பயன்படுத்திக் கொள்கிறது. 

சிந்து நதி சீனாவில் இருந்து பாய்ந்து வருவதால் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யும்பட்சத்தில் அந்நாட்டிடம் இருந்து இந்தியாவுக்கு நெருக்கடி எழலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தவிர பிரம்மபுத்திரா நதியின் கட்டுப்பாடும் சீனா வசமே உள்ளது. பாகிஸ்தான் தனது நெருங்கிய கூட்டாளி என்பதால் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இரு நதிகளையும் பாயவிடாமல் சீனா முடக்கி வைத்தால் நமது நாட்டின் வேளாண் தொழில் கடுமையாக பாதிக்கப்படும். தவிர பிரம்மபுத்திரா நதியின் கடைமடை பகுதியான வங்கதேசத்திலும் பெரும் இழப்பு ஏற்படலாம். 

Next Story