பாகிஸ்தானின் ஆயுதமாக மாறும் ப்ளே-ஸ்டோர் ஆப்ஸ் மொபைல் பயன்படுத்துபவர்களுக்கு இந்திய உள்துறை எச்சரிக்கை


பாகிஸ்தானின் ஆயுதமாக மாறும் ப்ளே-ஸ்டோர் ஆப்ஸ் மொபைல் பயன்படுத்துபவர்களுக்கு இந்திய உள்துறை எச்சரிக்கை
x
தினத்தந்தி 19 Dec 2016 4:53 AM GMT (Updated: 19 Dec 2016 4:53 AM GMT)

பாகிஸ்தான் ‘ஹேக்கர்ஸ்’ எனப்படும் தகவல் திருடர்கள், இந்தியர்கள் அதிகமாகப் பயன்படுத்தக் கூடிய ‘ப்ளே-ஸ்டோர்ஸில்’ வைரஸ் அதிகம் நிறைந்த ‘ஆப்’-களை ஊடுருவ செய்துள்ளனர்.

பாகிஸ்தான் ‘ஹேக்கர்ஸ்’ எனப்படும் தகவல் திருடர்கள், இந்தியர்கள் அதிகமாகப் பயன்படுத்தக் கூடிய ‘ப்ளே-ஸ்டோர்ஸில்’ வைரஸ் அதிகம் நிறைந்த ‘ஆப்’-களை ஊடுருவ செய்துள்ளனர்.

இப்போதைய கால கட்டத்தில் எல்லாமே ஆப்-கள் என்றாகி போனது. ஆண்டிராய்டு மொபைல் போனில் ஒரு ஆப்-ஐ டவுன்லோடு செய்துவிட்டால் போதும், அதன் மூலமே பொருட்கள் வாங்குவது, பணப்பறிமாற்றம் செய்வது என்று ஒரு மொபைல் போனுக்குள் உலகமே சுருங்கி விட்டது. இப்போது தீவிரவாதிகளும் இதே ஆப் முறையை கையாள்கின்றனர்.

உள்நாட்டு தீவிரவாதம், ‘ஸ்லீப்பர் செல்’-லுக்கு ஆட்களை சேர்ப்பது போன்ற செயல்களில் பெரும்பாலான அண்டை நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. இதனைதொடர்ந்து, பாகிஸ்தான் தீவிரவாதிகள் தற்போது புதிய தொழில்நுட்பத்தின் வழியே ஊடுருவ முயற்சிக்கின்றனர்.

வைரஸ் அதிகம் நிறைந்த ‘ஆப்’-களை பாகிஸ்தான் ‘ஹேக்கர்ஸ்’ எனப்படும் தகவல் திருடர்கள் இந்தியர்கள் அதிகமாகப் பயன்படுத்தக் கூடிய ‘ப்ளே-ஸ்டோர்ஸில்’ ஊடுருவ செய்துள்ளனர் . எனவே, “இதுபோன்ற ‘ஆப்’-களை பதிவிறக்கம் செய்யும்போது, மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு” இந்திய உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

பாகிஸ்தான் ஹேக்கர்சால் அனுப்பப்பட்டிருக்கும் வைரஸ் மூலம் ‘ப்ளே-ஸ்டோர்’-களில் இருந்து இன்ஸ்டால் செய்யப்படும் ஆப்கள் மூலம் முக்கியமான தகவல்களை நம்முடைய அனுமதியில்லாமல் திருடி விட முடியும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஸ்மார்ட் போன்களில் “TAIKING FROG, MPJUNKIE, BDJUNKIE, TOPGUN” போன்ற நான்குள் ‘ஆப்ஸ்’-களை டவுன்லோட் செய்திருந்தால் அவற்றை உடனடியாக செல்போனில் இருந்து நீக்கி விட வேண்டும் என்றும் கேட்டுக் உள்துறை கேட்டு கொண்டுள்ளது.

இந்திய ராணுவ நடவடிக்கைகளைக் கண்காணிக்க பாகிஸ்தான் ராணுவத்தினர் இதுபோன்ற ஆப்களை பயன்படுத்தி வருகின்றனர் என்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது.

இந்தியாவின் சார்பில் முன்வைக்கப்பட்ட தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளால், ஏற்கனவே கூகுள் நிறுவனம் ‘SMESH-APP’ என்ற ஆபத்தான ஆப்-க்கு தடை விதித்தது. இந்திய ராணுவத்தினர் இந்த ‘ஆப்’களை பயன்படுத்த வேண்டாம் என்று முன்னரே அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் அது தற்போது தீவிரமாக நடைமுறைக்கு வந்துள்ளது.

Next Story