முன்னாள் ராணுவ தளபதி உதவிசெய்தார் என கூறி முஷரப் அனைத்து வரம்பையும் தாண்டிவிட்டார் - பாகிஸ்தான் மந்திரி

முன்னாள் ராணுவ தளபதி உதவிசெய்தார் என கூறி முஷரப் அனைத்து வரம்பையும் தாண்டிவிட்டார் - பாகிஸ்தான் மந்திரி
x
தினத்தந்தி 22 Dec 2016 1:29 PM GMT (Updated: 22 Dec 2016 1:29 PM GMT)

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப் (வயது 70), 2007-ம் ஆண்டு அந்த நாட்டில் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தும், அரசியல் சட்டத்தை இடைநீக்கம் செய்தும், நீதிபதிகளை காவலில் வைத்தும் உத்தரவிட்டார். இது தொடர்பாக அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுபோன்று பாகிஸ்தானில் முக்கியமான தலைவர்கள் கொல்லப்பட்ட வழக்கிலும் பர்வேஸ் முஷரப் இடம்பெற்று உள்ளார். இந்த வழக்குகள் தொடர்பான விசாரணையை முஷரப், பாகிஸ்தானில் தங்கி இருந்து எதிர்கொள்ள வேண்டும் என்பதால், அவரது பெயர், வெளிநாடு செல்ல தடை விதிக்கும் வெளியேறுதல் கட்டுப்பாட்டு பட்டியலில் கடந்த ஆண்டு ஏப்ரல் 5-ந் தேதி சேர்க்கப்பட்டது. ஆனால் உடல் நிலை சரியில்லை என கூறி நீதிமன்றங்களுக்கு சென்று எப்படியோ தப்பிவிட்டார் வெளிநாட்டிற்கு.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் இருந்து வெளியேற முன்னாள் ராணுவ தளபதி ரஹீல் செரீப் உதவிசெய்தார் என்றுகூறி முஷரப் அனைத்து வரம்பையும் தாண்டிவிட்டார் என அந்நாட்டு மந்திரி கூறிஉள்ளார். 

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப் (வயது 70), 2007-ம் ஆண்டு அந்த நாட்டில் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தும், அரசியல் சட்டத்தை இடைநீக்கம் செய்தும், நீதிபதிகளை காவலில் வைத்தும் உத்தரவிட்டார். இது தொடர்பாக அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுபோன்று பாகிஸ்தானில் முக்கியமான தலைவர்கள் கொல்லப்பட்ட வழக்கிலும் பர்வேஸ் முஷரப் இடம்பெற்று உள்ளார். இந்த வழக்குகள் தொடர்பான விசாரணையை முஷரப், பாகிஸ்தானில் தங்கி இருந்து எதிர்கொள்ள வேண்டும் என்பதால், அவரது பெயர், வெளிநாடு செல்ல தடை விதிக்கும் வெளியேறுதல் கட்டுப்பாட்டு பட்டியலில் கடந்த ஆண்டு ஏப்ரல் 5-ந் தேதி சேர்க்கப்பட்டது. ஆனால் உடல் நிலை சரியில்லை என கூறி நீதிமன்றங்களுக்கு சென்று எப்படியோ தப்பிவிட்டார் வெளிநாட்டிற்கு.  

சிகிச்சை பெற என்று கூறி வெளிநாட்டு சென்றுவிட்டு தொடர்ச்சியாக பேட்டிகள் கொடுத்து அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறார் பர்வேஷ் முஷரப். 

சமீபத்தில் அளித்த பேட்டியில் பாகிஸ்தானில் இருந்து வெளியேற முன்னாள் ராணுவ தளபதி ரஹீல் செரீப் உதவிசெய்தார் என்று  பர்வேஷ் முஷாரப் கூறிஉள்ளது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஹீல் செரீப் கடந்த நவம்பர் மாதம் தான் மூன்று ஆண்டுகள் பணியை நிறைவு செய்து ராணுவ தளபதி பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றார். முஷரப் பேசுகையில் “அவர் (ரஹீல் செரீப்) எனக்கு உதவிசெய்தார். அவருடைய தலைவராக நான் இருந்து உள்ளேன், அவருக்கு முன்னதாக ராணுவ தளபதியாக இருந்து உள்ளேன். அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியல் ரீதியிலானது எனவே அவர் நான் வெளியேற உதவி செய்தார்,” என்றார். இவ்விவகாரம் பாகிஸ்தானில் பிரச்சனையாகி உள்ளது.

இதற்கிடையே முஷரப் பேச்சில் எந்தஒரு உண்மை தன்மையும் கிடையாது என்று பாகிஸ்தான் அரசு மறுத்துவிட்டது.

இந்நிலையில் அந்நாட்டு மந்திரியும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான காதிர் பலூச் பேசுகையில், “உதவிசெய்தார் என முன்னாள் ராணுவ தளபதி ரஹீல் செரீப்பிற்கு எதிராக பேசி முஷரப் அனைத்து வரம்பையும் தாண்டிவிட்டார்,” என்று கூறிஉள்ளார். மேலும் பேசுகையில், முஷரப் இதுபோன்று பேசியிருக்க கூடாது, ரஹீல் செரீப் இவ்விவகாரத்தில் முக்கிய பங்கு வகித்து இருந்தாலும் முஷரப் அதனை வெளியிட்டு இருக்க கூடாது. இந்த அறிக்கையினால் ஏற்படும் தாக்கத்தினை அவர் உணர்ந்து இருக்க வேண்டும், என்று கூறிஉள்ளார் காதிர் பலூச்.

Next Story