பாகிஸ்தானில் இந்தியருக்கு 3½ மாதம் சிறை விசா முடிந்தும் தங்கியதால் நடவடிக்கை


பாகிஸ்தானில் இந்தியருக்கு 3½ மாதம் சிறை விசா முடிந்தும் தங்கியதால் நடவடிக்கை
x
தினத்தந்தி 22 Dec 2016 11:23 PM GMT (Updated: 2016-12-23T04:53:32+05:30)

இந்தியாவை சேர்ந்தவர், ரேகனூர் ரகுமான். இவர் பாகிஸ்தானுக்கு சென்றிருந்தார். இவரது விசா, கடந்த 14–ந் தேதியுடன் முடிந்து விட்டதாக தெரிகிறது. ஆனால் அவர் விசா காலம் முடிந்தும் நாடு திரும்பாமல், அங்கு தங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் லாகூர் கண்டோன்மென

லாகூர்,

இந்தியாவை சேர்ந்தவர், ரேகனூர் ரகுமான். இவர் பாகிஸ்தானுக்கு சென்றிருந்தார். இவரது விசா, கடந்த 14–ந் தேதியுடன் முடிந்து விட்டதாக தெரிகிறது. ஆனால் அவர் விசா காலம் முடிந்தும் நாடு திரும்பாமல், அங்கு தங்கியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அவர் லாகூர் கண்டோன்மென்ட் பகுதியில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை லாகூர் கண்டோன்மென்ட் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்றது.

விசாரணை முடிவில் ரேகனூர் ரகுமான் மீதான குற்றச்சாட்டு, நிரூபணமானதால் அவருக்கு 3½ மாதம் சிறைத்தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

தண்டனை காலம் முடிந்ததும் அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என லாகூரில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.


Next Story