டொனால்டு டிரம்ப் - புதின் அணு ஆயுத பலத்தை அதிகரிக்க போட்டா போட்டி

டொனால்டு டிரம்ப் - புதின் அணு ஆயுத பலத்தை அதிகரிக்க போட்டா போட்டி
x
தினத்தந்தி 23 Dec 2016 10:22 AM GMT (Updated: 23 Dec 2016 10:21 AM GMT)

எதிர்வரும் 20ம் தேதி அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கும் டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் அணு ஆயுத கொள்கை தொடர்பாக கருத்து ஒன்று வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் 20ம் தேதி அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கும் டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் அணு ஆயுத கொள்கை தொடர்பாக கருத்து ஒன்று வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவின் அணு ஆயுத பலத்தை அதிகரித்து அதனை விரிவுப்படுத்த வேண்டும் என டிரம்ப் கூறியுள்ளார். உலகம் அணு ஆயுதம் சம்பந்தமாக உரிய புரிந்துணர்வுக்கு வரும் வரை இதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அணு ஆயுத பலத்தை அதிகரிக்க வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமர் புதின்ன் தெரிவித்து 24 மணி நேரத்திற்கு முன்பாக டிம்ரப் அணு ஆயுதம் சம்பந்தமாக கருத்து வெளியிட்டுள்ளார் என்பதும் முக்கியமானது.

அமெரிக்காவிடம் தற்போது 7 ஆயிரத்து 100 அணு ஆயுதங்கள் இருப்பதுடன் ரஷ்யாவிடம் 7 ஆயிரத்து 300 அணு ஆயுதங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

எது எப்படி இருந்த போதிலும் இரு அணு ஆயுத வல்லரசுகளும் போட்டி போட்டுக்கொண்டு அணு ஆயுத பலத்தை அதிகரிப்பதானது எதிர்காலத்தில் பெரிய  அணு ஆயுத போருக்கு வித்திடும் என பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story