சிரியாவில் துருக்கி ராணுவ வீரர்கள் 2 பேர் எரித்துக் கொலை ஐ.எஸ். இயக்கத்தினர் வெறிச்செயல்

சிரியாவில் துருக்கி ராணுவ வீரர்கள் 2 பேர் எரித்துக் கொலை ஐ.எஸ். இயக்கத்தினர் வெறிச்செயல்
x
தினத்தந்தி 23 Dec 2016 8:15 PM GMT (Updated: 2016-12-24T01:36:21+05:30)

சிரியாவில் கடந்த மாதம், துருக்கி ராணுவ வீரர்கள் 2 பேரை ஐ.எஸ். இயக்கத்தை சேர்ந்தவர்கள் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர். அவர்களது நிலைமை என்ன ஆனது என்பது தெரியாமலே இருந்து வந்தது.

பெய்ரூட்,

சிரியாவில் கடந்த மாதம், துருக்கி ராணுவ வீரர்கள் 2 பேரை ஐ.எஸ். இயக்கத்தை சேர்ந்தவர்கள் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர். அவர்களது நிலைமை என்ன ஆனது என்பது தெரியாமலே இருந்து வந்தது.

இந்த நிலையில், ஐ.எஸ். இயக்கத்தினர் தங்கள் இணையதள பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை நேற்று முன்தினம் வெளியிட்டனர். அதில் கடத்தி செல்லப்பட்ட துருக்கி வீரர்கள் 2 பேரும் உயிரோடு தீ வைத்து எரித்துக் கொல்லப்படும் கொடூர காட்சிகள் இருந்தன.

19 நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோவில், ராணுவ வீரர்கள் இருவரையும் எரித்துக்கொல்வதற்கு முன் பயங்கரவாதி ஒருவன் துருக்கி மொழியில் அந்நாட்டின் அதிபர் தாயிப் எர்டோகனை கடுமையாக தாக்கி பேசுகிறான். மேலும் அவன் துருக்கியில் அழிவை விதைக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கிறான். கடந்த 22-ந் தேதி சிரியாவின் அல் பாப் நகரில் நடந்த மோதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 16 பேர் ஐ.எஸ். இயக்கத்தினரால் கொல்லப்பட்டனர். இது துருக்கிக்கு மிகப்பெரிய இழப்பாக கருதப்பட்ட நிலையில், ஐ.எஸ். இயக்கத்தினரால் கடத்தப்பட்ட அந்நாட்டு வீரர்கள் 2 பேர் தற்போது எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story