நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் சிறையில் இருந்து 220 இந்திய மீனவர்கள் விடுதலை


நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் சிறையில் இருந்து 220  இந்திய மீனவர்கள் விடுதலை
x
தினத்தந்தி 25 Dec 2016 11:51 AM GMT (Updated: 25 Dec 2016 11:51 AM GMT)

நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் சிறையில் இருந்து 220 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 220 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்து கராச்சியில் உள்ள மாலிர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கராச்சி,

நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் சிறையில் இருந்து 220 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 220 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்து கராச்சியில் உள்ள மாலிர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் 220 இந்திய மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் இன்று விடுதலை செய்யப்பட்டனர் என்று கராச்சியில் உள்ள மாலிர் சிறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இன்னும் 219 மீனவர்கள் வரும் அடுத்த மாதம் 5ம் தேதி(ஜன.,5) விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.  பாகிஸ்தானில் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்ட 439 இந்திய மீனவர்களில் தற்போது 220 பேர் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தை நடைபெறாத நிலையில், இந்திய மீனவர்களின் விடுதலை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

Next Story