பகை மற்றும் பழிவாங்கும் உணர்வை கைவிடும்படி போராட்டகாரர்களுக்கு கிறிஸ்துமஸ் தினவிழாவில் போப் வேண்டுகோள்

பகை மற்றும் பழிவாங்கும் உணர்வை கைவிடும்படி போராட்டகாரர்களுக்கு கிறிஸ்துமஸ் தினவிழாவில் போப் வேண்டுகோள்
x
தினத்தந்தி 25 Dec 2016 3:03 PM GMT (Updated: 2016-12-25T20:33:10+05:30)

சிரியாவில் நடைபெறும் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று போப் பிரான்சிஸ் வலியுறுத்தி உள்ளார்.

வாடிகன்,

சிரியாவில் நடைபெறும் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று போப் பிரான்சிஸ் வலியுறுத்தி உள்ளார்.

கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி வாடிகன் நகரில் உள்ள செயிண்ட் பீட்டர் சதுக்கத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் போப் பிரான்சிஸ் உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் பேசியதாவது:

சிரியாவில் நடைபெறும் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். இந்த மோதலில் அளவுக்கு அதிகமாக ரத்தம் சிந்தப்பட்டுள்ளது.

பிரான்சிஸ், சர்வதேச சமூகம், ஐந்தாண்டுகளாக நடைபெறும் இந்த மோதல்களுக்கு தீவிரமான பேச்சுவார்த்தை மூலம் ஒரு சுமூகமான தீர்வை எட்டப்பட வேண்டும்.

பகை மற்றும் பழிவாங்கும் உணர்வை கைவிடும்படி பாலத்தீனியர்கள் மற்றும் இஸ்ரேலியர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக பெர்லின் நகரில் நடந்த லாரி விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

Next Story