மொசூல் நகர் அருகே பீரங்கி தாக்குதல் அப்பாவி பொதுமக்கள் 9 பேர் பலி


மொசூல் நகர் அருகே பீரங்கி தாக்குதல் அப்பாவி பொதுமக்கள் 9 பேர் பலி
x
தினத்தந்தி 25 Dec 2016 9:03 PM GMT (Updated: 2016-12-26T02:33:26+05:30)

ஈராக்கில் மொசூல் நகரின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சிறுநகரங்கள், அரசு படைகளின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளன. அந்த பகுதிகளில் கடந்த பல நாட்களாக ஐ.எஸ். அமைப்பினர் குறிவைத்து கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அங்கு 2 இடங்களை குறிவைத்து ந

பாக்தாத்,

ஈராக்கில் மொசூல் நகரின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சிறுநகரங்கள், அரசு படைகளின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளன. அந்த பகுதிகளில் கடந்த பல நாட்களாக ஐ.எஸ். அமைப்பினர் குறிவைத்து கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அங்கு 2 இடங்களை குறிவைத்து நேற்று முன்தினம் ஐ.எஸ். அமைப்பினர் பீரங்கி தாக்குதல்கள் நடத்தினார்கள். இந்த தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் 9 பேர் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து நினிவே மாகாண கவுன்சில் உறுப்பினர் ஹோசம் அல் அப்பர் கூறுகையில், ‘‘மொசூல் நகரை ஒட்டி அரசு படைகளின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள அல் ஜூகுர், அல் குதிஸ் நகரங்களில் ஐ.எஸ். அமைப்பினர் தொடர் பீரங்கி தாக்குதல்கள் நடத்தினர். இதில் 9 பேர் உயிரிழந்தனர். 17 பேர் படுகாயம் அடைந்தனர். ஆனால் அவர்களை அரசு படையினர் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லாமல் விட்டு விட்டனர்’’ என்று தெரிவித்தார்.


Next Story