சிரியாவில் ஐ.எஸ். இயக்கத்தினர் 44 பேர் கொன்று குவிப்பு துருக்கி ராணுவம் அதிரடி


சிரியாவில் ஐ.எஸ். இயக்கத்தினர் 44 பேர் கொன்று குவிப்பு துருக்கி ராணுவம் அதிரடி
x
தினத்தந்தி 28 Dec 2016 10:30 PM GMT (Updated: 28 Dec 2016 7:45 PM GMT)

சிரியாவில் ஐ.எஸ். அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள அல் பாப் நகரை மீட்பதற்கு கிளர்ச்சியாளர்கள் படை துருக்கி ராணுவத்தின் உதவியோடு கடுமையாக போராடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் அந்த நகரில் துருக்கி ராணுவத்தினரும், கிளர்ச்சி படையினரும் இணைந்த

டமாஸ்கஸ்,

சிரியாவில் ஐ.எஸ். அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள அல் பாப் நகரை மீட்பதற்கு கிளர்ச்சியாளர்கள் படை துருக்கி ராணுவத்தின் உதவியோடு கடுமையாக போராடி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் அந்த நகரில் துருக்கி ராணுவத்தினரும், கிளர்ச்சி படையினரும் இணைந்து ஐ.எஸ். இயக்கத்தினரின் நிலைகளை குறிவைத்து தொடர் தாக்குதலை நடத்தினர்.

இதில் ஐ.எஸ். இயக்கத்தினர் 44 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் இந்த தாக்குதலில் அந்த இயக்கத்தை சேர்ந்த 117 பேரும், கிளர்ச்சியாளர்கள் தரப்பில் 7 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதற்கிடையே, சிரியாவின் கிழக்கு பகுதியில் ஐ.எஸ். அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கிராமம் மீது அடையாளம் தெரியாத விமானம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.

இதில் 10 குழந்தைகள் உள்பட 22 பொதுமக்கள் உயிர் இழந்தனர்.


Next Story