சிரியாவில் ரஷ்ய படைகள் குறைக்கப்படும்: புதின் அறிவிப்பு

சிரியாவில் ரஷ்ய படைகள் குறைக்கப்படும்:  புதின் அறிவிப்பு
x
தினத்தந்தி 29 Dec 2016 2:00 PM GMT (Updated: 29 Dec 2016 2:00 PM GMT)

சிரியாவின் ஆளும் கட்சி மற்றும் கிளர்ச்சியாளர்கள் இடையே தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டதனை அடுத்து சிரியாவில் உள்ள தங்களது படைகள் குறைக்கப்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் இன்று அறிவித்துள்ளார்.

மாஸ்கோ,

சிரியாவில் அதிபர் அல்-ஆசாத்திற்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  கடந்த சில வருடங்களாக நடந்து வரும் இந்த போராட்டத்தினால் பல இடங்களில் வன்முறைகள் பரவின.  அதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அரசு ராணுவத்தினை பயன்படுத்தியது.

கிளர்ச்சியாளர்கள் வசிக்கும் பகுதியில் ராக்கெட் மற்றும் பீரங்கி தாக்குதலும் நடத்தப்பட்டன.  இந்த தாக்குதலில் இதுவரை லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.  சிரியாவின் இந்த நடவடிக்கைக்கு ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.  அதன்படி தங்களது படைகளை சிரியாவுக்கு அனுப்பியும் போரில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், சிரியா நாட்டு அரசுக்கும் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டுள்ளது.  இதனை அடுத்து தங்களது படைகளை குறைப்பது என்ற முடிவினை ரஷ்யா எடுத்துள்ளது.

இது பற்றி தொலைக்காட்சி வழியே புதின் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், சிரியாவில் உள்ள ரஷ்ய படைகளை குறைக்க வேண்டுமென்ற சிரிய நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒப்புதலை நான் ஏற்று கொள்கிறேன் என கூறியுள்ளார்.

சிரிய அதிபர் பஷார் அல்-ஆசாத்திற்கு ரஷ்யா தொடர்ந்து ஆதரவினை அளிக்கும் என்றும் அவர் கூறினார்.

Next Story