உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 29 Dec 2016 10:00 PM GMT (Updated: 29 Dec 2016 7:41 PM GMT)

* ஆப்கானிஸ்தானில் உள்ள குன்டுஸ் நகரின் சீக்கிய சமுதாயத் தலைவராக இருந்த லாலா தேல் சவுஸ் என்பவரை நேற்று மர்ம மனிதர்கள் சுட்டுக் கொன்றார்கள். இது தொடர்பாக மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரிக்கிறார்கள். * அமெரிக்க தேர்தலின்போது சில

* ஆப்கானிஸ்தானில் உள்ள குன்டுஸ் நகரின் சீக்கிய சமுதாயத் தலைவராக இருந்த லாலா தேல் சவுஸ் என்பவரை நேற்று மர்ம மனிதர்கள் சுட்டுக் கொன்றார்கள். இது தொடர்பாக மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரிக்கிறார்கள்.

* அமெரிக்க தேர்தலின்போது சில கட்சிகள் மற்றும் தலைவர்களின் கம்ப்யூட்டர்களில் தாக்குதல் நடத்தியதற்காக ரஷியா மீது மேலும் பல பொருளாதார தடைகளை விதிக்க திட்டமிட்டு இருப்பதாக ஒபாமா கூறினார்.

* அமெரிக்காவின் நியூயார்க் நகரில் போலீஸ் அதிகாரிகளாக பணியில் இருக்கும் சீக்கியர்கள், தங்கள் மத வழக்கப்படி தலைப்பாகை வைத்துக்கொள்ளலாம் என்றும், நீண்ட தாடி வைத்துக்கொள்ள தடை இல்லை என்றும் நியூயார்க் நகர போலீஸ் இலாகா அறிவித்துள்ளது.

* கொலம்பியாவில் 52 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டுப் போர் சமாதான ஒப்பந்தத்தின் அடிப்படையில் முடிவுக்கு வந்துள்ளது. இந்த போரின் போது சிறிய குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு கருணை அடிப்படையில் மன்னிப்பு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் பொது மன்னிப்பு சட்டத்திற்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்து உள்ளது.

* பிலிப்பைன்ஸ் நாட்டின் லெய்டே மாகாணத்தில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியை பார்க்க ஏராளமான மக்கள் அங்கு குவிந்திருந்தனர். அப்போது அங்கு உள்ள வணிக வளாகத்துக்கு வெளியே பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறியது. இதில் சிக்கி 33 பேர் படுகாயம் அடைந்தனர்.

* ‘ஸ்டார் வார்ஸ்’ படங்களில் நடித்து பிரபலமான ஹாலிவுட் நடிகை கேரி பிஷர்ஸ் (60), கடந்த செவ்வாய்க்கிழமை மாரடைப்பால் இறந்தார். ஹாலிவுட் திரையுலக ரசிகர்கள் இந்த சோகத்தில் இருந்து மீள்வதற்குள் கேரி பிஷர்சின் தாயும், பழம்பெரும் நடிகையுமான டெபி ரெனால்ட்ஸ் நேற்று முன்தினம் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 88.

Next Story