மத்திய பாக்தாத் நகரில் இரட்டை குண்டுவெடிப்புகள்: 28 பேர் பலி

மத்திய பாக்தாத் நகரில் இரட்டை குண்டுவெடிப்புகள்:  28 பேர் பலி
x
தினத்தந்தி 31 Dec 2016 11:53 AM GMT (Updated: 31 Dec 2016 11:53 AM GMT)

ஈராக் நாட்டின் மத்திய பாக்தாத் நகரில் மக்கள் கூட்டம் அதிகம் நிறைந்த சந்தை பகுதியில் இன்று நடந்த இரு குண்டு வெடிப்பு சம்பவங்களில் குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டனர். 54க்கும் கூடுதலானோர் காயமடைந்துள்ளனர்.

பாக்தாத்,

இது பற்றி காவல் துறை அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, அல்-சினெக் பகுதியில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் பல கடைகள் சேதமுற்றன என கூறினார்.  கடந்த அக்டோபர் மாத இறுதியில் இருந்து இதுவரை இல்லாத வகையில் நடந்த இந்த தாக்குதலுக்கு உடனடியாக ஒருவரும் பொறுப்பேற்கவில்லை.

ஆனால் அனைத்து குண்டுவெடிப்புகளுக்கும் ஐ.எஸ். ஜிகாதி குழுவே இதுவரை பொறுப்பேற்று வந்துள்ளது.

ஐ.எஸ். பிடியில் உள்ள வடக்கு பகுதியில் அமைந்த மொசூல் நகரை மீட்கும் முயற்சியில் ஈராக் ராணுவம் ஈடுபட்டுள்ளது.  கடந்த அக்டோபர் 17ந்தேதியில் இருந்து இந்த முயற்சி தொடருகிறது.  கடந்த வருடங்களில் இல்லாத வகையில் மிக பெரிய அளவில் நடைபெறும் இந்த ராணுவ நடவடிக்கையினை அடுத்து பாக்தாத் நகர் தீவிர கண்காணிப்பில் உள்ளது.

இன்று நடந்த இந்த தாக்குதல் மொத்த பொருட்கள் விற்கும் சந்தை பகுதியாகும்.  வேன்களில் இருந்து சரக்குகளை கீழே இறக்கி வைக்கும் மற்றும் தள்ளுவண்டிகள் ஓட்டி செல்லும் தினக்கூலிகள் அதிகம் கூடுகிற பகுதியாகும்.

Next Story