பொங்கல் திருநாளை முன்னிட்டு இலங்கை ஜனாதிபதி-பிரதமர் தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து


பொங்கல் திருநாளை முன்னிட்டு இலங்கை ஜனாதிபதி-பிரதமர் தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து
x
தினத்தந்தி 14 Jan 2017 4:20 AM GMT (Updated: 2017-01-14T09:50:46+05:30)

தமிழர்களின் பாரம்பரியமிக்க பொங்கல் திருநாளை முன்னிட்டு இலங்கை ஜனாதிபதி -பிரதமர் அனைத்து தமிழர்களுக்கும் பொங்கல் வாழ்த்து கூறியுள்ளனர்.

மனிதனுக்கும், இயற்கையின் கொடைகளுக்குமிடையிலான பரஸ்பர உடன்படிக்கையை புதுப்பிக்கும் கலாசார பண்டிகைகள் மூலம் மனித சமூகத்தின் பரந்த உள்ளத்தின் உயர்ந்த பண்புகள் வெளிப்படுத்தப்படுகின்றது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தைப்பொங்கல் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

மனித வளர்ச்சியின் ஆரம்பத்திலேயே இயற்கையுடன் நெருங்கிய பிணைப்பினை கொண்டுள்ள மனிதன் ஒட்டுமொத்த இயற்கையினை பிரதிநிதித்துவப்படுத்தும் சூரிய பகவான் மீது கொண்டுள்ள பக்தியினை பரிணாம வளச்சியை நோக்கிய பயணத்தின் பின்னரும் கைவிடவில்லை.

இந்து சமயத்தை பின்பற்றும் உலக வாழ் தமிழ் மக்கள் தொன்று தொட்டு மேற்கொண்டு வரும் சூரிய வழிபாட்டின் சிறந்த வெளிப்பாடாகவே தைப்பொங்கல் இருந்து வருகின்றது.

சகோதர தமிழ் மக்களுக்கும் நாட்டிற்கும் சௌபாக்கியமும், மகிழ்ச்சியும் நிறைந்த தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன் என அவர் தெரித்துள்ளார்.

இது குறித்து ரணில் விக்ரமசிங்கே  வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: 

தைப்பொங்கல் மனித சமூகத்தின் மத்தியல் நல்லிணக்கத்துடன் வாழ்வதன் முக்கியத்துவத்தை நினைவூட்டுகிறது.

சமத்துவம் மற்றும் நன்றியுணர்வு என்பவற்றின் பெறுமதியை எடுத்துக் கூறும் தைத்திருநாள் கலாசார, சமய பல்வகைமையை மதித்து, மனித சமூகத்தின் மத்தியில் வாழ்வதன் முக்கியத்துவத்தை நினைவூட்டுகிறது.

எனவே இந்த பொங்கல் திருநாளில் மகிழ்ச்சி பெருகட்டும் விவசாயிகளின் வாழ்வு சிறக்கட்டும் என்று தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story