இந்தியா சிந்து நதி தண்ணீரை வராமல் தடுத்தால் ரத்த ஆறு ஓடும் ஹபீஸ் சயீத எச்சரிக்கை


இந்தியா சிந்து நதி தண்ணீரை வராமல் தடுத்தால் ரத்த ஆறு ஓடும் ஹபீஸ் சயீத எச்சரிக்கை
x
தினத்தந்தி 14 Jan 2017 8:35 AM GMT (Updated: 2017-01-14T14:05:44+05:30)

இந்தியா சிந்து நதி தண்ணீரை பாகிஸ்தானுக்கு வராமல் தடுத்தால் அங்கு ரத்த ஆறு ஓடும் என ஜமாத்-உத்-இஸ்லாமிய தலைவர் ஹபீஸ் சயீத் எச்சரிக்கை விடுத்தார்


பாகிஸ்தானின் பைசலாபாத்தில்  காஷ்மீர் மாநாடு பேரணி நடைபெற்றது இந்த பேரணியில் ஜமாத்-உத்-இஸ்லாமிய  தலைவர் மற்றும் மும்பை பயங்கரவாத தாக்குதல் சூத்திரதாரி ஹபீஸ் சயீத், கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

650,000 காஷ்மீரி முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு இந்திய இராணுவம் பொறுப்பு ஏற்கவேண்டும். இப்போது காஷ்மீரி முஜாகிதீன் அக்னோர், உரி மற்றும் பிற பகுதிகளில் பதிலடி கொடுத்து உள்ளனர்.முஜாகிதீன் இந்தியாவை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.இந்தியா அவர்களை தடுத்த நிறுத்த முடியாது. இப்போது நான் தனியாக இல்லை பலூச் மக்கள் மற்றும் மற்ற பாகிஸ்தானியர் என்னுடன் உள்ளனர். என கூறினார்.

மேலும் அவர் பேசும் போது பிரதமர் மோடியை விமர்சனம் செய்தார். இந்தியா சிந்து நதி தண்ணீரை பாகிஸ்தானுக்கு வராமல் தடுத்தால் அங்கு ரத்த ஆறு ஓடும் என எச்சரிக்கை விடுத்தார்

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பலூச் தலைவர் ஷாக்‌ஷைன் பகுதி கூறும் போது ஹபீஸ் செய்யது அழைத்தால்  காஷ்மீர் சுதந்திர இயக்கித்தில் சேர 50 ஆயிரம் பலூச் இளைஞர்கள் காத்து இருக்கிறார்கள்.என கூறினார்

Next Story