மெக்சிகோ பிபிஎம் இசை திருவிழாவில் மர்ம மனிதன் துப்பாக்கி சூடு 8 பேர் பலி


மெக்சிகோ பிபிஎம் இசை திருவிழாவில் மர்ம மனிதன் துப்பாக்கி சூடு 8 பேர் பலி
x
தினத்தந்தி 16 Jan 2017 11:12 AM GMT (Updated: 2017-01-16T16:42:45+05:30)

மெக்சிகோ நாட்டில் பிரிட் சுற்றுலா விடுதியில் பிபிஎம் இசை திருவிழாவில் புகுந்து மர்ம மனிதன் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலியானார்கள்

மெக்சிகோ நாட்டில் பிரிட் சுற்றுலா விடுதியில் பிபிஎம் இசை திருவிழா என்னும் புகழ்பெற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுடன் ஆரவாரமாக அந்த நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது..

அப்போது அங்கு துப்பாக்கியுடன் வந்த ஒரு மர்ம நபர் அங்கிருந்தவர்களை சரமாரியாக சுட்டுள்ளார். துப்பாக்கி சூட்டில் சம்பவ இடத்திலேயே எட்டு பேர் பலியானார்கள். பலர் படுகாயமடைந்தார்கள். இந்த விபரீத சம்பவம் நடந்த பின்னர் அங்கிருந்த மக்கள் பதட்டத்தில் கத்தி கொண்டே சிதறியடித்து ஓடினார்கள்.

இங்கு துப்பாக்கி சூடு நடத்திய அந்த மர்ம நபர் அந்த இடத்தின் அருகில் உள்ள வேறு சுற்றுலா விடுதிக்கும் சென்று இதே போல விபரீத செயலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இறந்தவர்களில் ஒருவர் அந்த விடுதியின் காவலாளி என கூறப்படுகிறது. துப்பாக்கி சூட்டுற்கான காரணத்தை இதுவரை போலீசார் வெளியிடவில்லை.

மெக்சிகோவில் குற்றமும், வன்முறையும் அதிகளவில் நடப்பதாகவும் இந்த துப்பாக்கி சூடு தீவிரவாதிகளின் செயலாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story