அமெரிக்க முன்னாள் அதிபர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

அமெரிக்க முன்னாள் அதிபர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 18 Jan 2017 10:44 AM GMT (Updated: 18 Jan 2017 10:44 AM GMT)

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ.புஷ் (வயது 92) உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நியூயார்க்,

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ.புஷ் (வயது 92) உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபாராக இருந்த ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷின் தந்தையும், அமெரிக்காவின் 41-வது அதிபராக இருந்த ஜார்ஜ் எச்.டபிள்யூ.புஷ் இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.இந்நிலையில் அவருக்கு திடீரென உடலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து ஹூஸ்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.  ஜார்ஜ் எச்.டபிள்யூ.புஷ், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ஜார்ஜ் எச்.டபிள்யூ.புஷ் கடந்த 1989 முதல் 1993 வரை அமெரிக்க அதிபராக பதவி வகித்தார்.

Next Story