உலகைச்சுற்றி


உலகைச்சுற்றி
x
தினத்தந்தி 21 Jan 2017 8:14 PM GMT (Updated: 2017-01-22T01:44:22+05:30)

இத்தாலியில் வெரோனா என்ற இடத்தில் ஹங்கேரியை சேர்ந்த பஸ் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. இதில் 16 பேர் உயிரிழந்தனர்.

* இத்தாலியில் வெரோனா என்ற இடத்தில் ஹங்கேரியை சேர்ந்த பஸ் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. இதில் 16 பேர் உயிரிழந்தனர். 36 பேர் படுகாயம் அடைந்தனர். பலியானவர்களில் பிரான்சை சேர்ந்த பஸ் டிரைவரும், அவரது குடும்பத்தினரும் அடங்குவர்.

* சீனாவில் ஹூபெய் மாகாணத்தில் நிலச்சரிவு காரணமாக 3 மாடிகளை கொண்ட ஓட்டல் இடிந்து விழுந்தது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். 10 பேரை காணவில்லை.

* அமெரிக்காவில் நடந்த ஊழல் தொடர்பான ஒரு வழக்கில் தன் குடும்பத்தினரின் பெயர் இடம் பெற்றிருப்பதற்கு ஐ.நா. சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் பான் கி மூன் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த வழக்கில் பான் கி மூன் சகோதரர் பான் கி சாங்கை கைது செய்யுமாறு, தென் கொரியாவை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.

* சிலி நாட்டில் பெரிய அளவில் காட்டுத்தீ பரவி, 50 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு நாசமாகி உள்ளது. இந்த தீயினால், நகரங்கள், தொழிற்சாலைகளுக்கு ஆபத்து ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. இதையொட்டி அங்கு நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. 

Next Story