பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகல்


பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகல்
x
தினத்தந்தி 24 Jan 2017 9:43 AM GMT (Updated: 24 Jan 2017 9:43 AM GMT)

பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகி கொண்டது. இதற்கான ஆணையில் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார்.

பசிபிக் வர்த்தக ஒப்பந்தம் என்றழைக்கப்படும் டிபிபி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகி கொண்டது. இதற்கான நிர்வாக ஆணையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரப்ப் கையெழுத்திட்டு, தனது தேர்தல் பிரச்சார உறுதிமொழியொன்றை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிறைவேற்றியுள்ளார்.

முன்னாள் அமெரிக்க அதிபரான பராக் ஒபாமாவின் ஆசிய கொள்கையின்  12 நாடுகள் உள்ளடக்கியதாக இந்த வர்த்தக ஒப்பந்தம் விளங்கியது.

பசிபிக் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பிளவுபட்ட அமெரிக்க நாடாளுமன்றம் இதற்கான இசைவை அளிக்காததால், டிபிபி தொடர்பான நிர்வாக ஆணையில் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டது ஒரு வெறும் குறியீட்டளவிலான நடவடிக்கை என்றே கருதப்படுகிறது.

இது குறித்து கூறிய டொனால்டு டிரம்ப் அமெரிக்க தொழிலாளர்களுக்கு ஒரு மிகப் பெரிய நன்மையை நாங்கள் தற்போது செய்துள்ளோம்'' என்று குறிப்பிட்டார்.


Next Story