அணு ஏவுகணை சோதனை வெற்றியடைந்ததாக பாகிஸ்தான் தகவல்


அணு ஏவுகணை சோதனை வெற்றியடைந்ததாக பாகிஸ்தான் தகவல்
x
தினத்தந்தி 24 Jan 2017 1:46 PM GMT (Updated: 2017-01-24T19:16:35+05:30)

பல ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் வல்லமை கொண்ட அணு ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.


இஸ்லாமாபாத், 

பாகிஸ்தான், ‘அப்பீல்’ என்ற பாலிஸ்டிக் ரக ஏவுகணையை வடிவமைத்துள்ளது. இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது. இலக்கை துல்லியமாக தாக்கியது. 

இது, அணு ஆயுதங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை சுமந்து சென்று, 2,200 கி.மீ. தூரம்வரை பாய்ந்து சென்று இலக்கை துல்லியமாக தாக்கக்கூடியது. இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்கள், இந்த தூரத்துக்குள்தான் உள்ளன. 

இந்த ஏவுகணை, எதிரி நாட்டு ராடார்களின் பார்வையில் சிக்காது. தரையில் இருந்து பாய்ந்து சென்று தரையில் உள்ள மற்றொரு இலக்கை தாக்கவல்லது. இந்த தகவலை பாகிஸ்தான் ராணுவ செய்தித்தொடர்பாளர் ஆசிப் காபூர் தெரிவித்தார்.


Next Story