இஸ்லாமிய நாட்டை சேர்ந்தவர்களை அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க தடை செய்ய வாய்ப்பு


இஸ்லாமிய நாட்டை சேர்ந்தவர்களை அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க தடை செய்ய வாய்ப்பு
x
தினத்தந்தி 26 Jan 2017 7:00 AM GMT (Updated: 2017-01-26T12:30:05+05:30)

அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் குறிப்பிட்ட கவலை காரணமாக சில நாட்டை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க தடை விதிக்க திட்டமிட்டு உள்ளது.

வாஷிங்டன், 

அமெரிக்க குடியேற்ற வழக்கறிஞர் சங்கம் சார்பில் விடப்பட்டு உள்ள வரைவு அறிக்கையின்படி இஸ்லாமிய நாடுகள் உள்பட குறிப்பிட்ட நாட்டை சேர்ந்தவர்களை அமெரிக்காவிற்கு பிரவேசிக்க தடை விதிக்க திட்டமிடப்பட்டு உள்ளது என தெரியவந்து உள்ளது.

இருப்பினும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையானது வரைவு அறிக்கை தொடர்பாக பதிலளிக்க மறுத்துவிட்டது. ஆனால் அமெரிக்க மீடியாக்கள் இவ்வாறு தடைவிதிக்கப்படும் நாடுகளானது இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் நாடுகளாகும் என செய்தி வெளியிட்டு உள்ளது. இதில் குறிப்பிடும் படியாக சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவருடைய அமைச்சரவை சகாக்கள் தரப்பில் மத ரீதியிலான தடையிருக்கும் என்பது மறுக்கப்பட்டது. அமெரிக்காவின் குடியேற்ற வழக்கறிஞர்கள் தரப்பிலான வரைவு அறிக்கையானது வெளியாகி உள்ளது. வரைவு அறிக்கையில் அமெரிக்கா சில நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கலுக்கும், அகதிகள் அனுமதிக்கும் 120 நாட்கள் தடை விதிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

“விசா வழங்கல் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு உடைய தனிநபர்களை கண்டறிவதில் முக்கியமான பணியை கொண்டு உள்ளது, மேலும் அவர்கள் அமெரிக்காவிற்கு பிரவேசிப்பதை தடுக்கவும் முக்கிய பணியாற்றுகிறது,” என வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நியூயார்க் தாக்குதலை அடுத்து அமெரிக்காவில் பயங்கரவாத குற்றச்சாட்டுகளில் வெளிநாட்டை சேர்ந்த தனிநபர்கள் குற்றவாளியாக இருந்ததும் வரைவு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. 

போர், கலவரம், பேரழிவு காரணமாக குறிப்பிட்ட நாடுகளில் நிலையானது மிகவும் மோசம் அடைந்து உள்ளது; உள்நாட்டு அமைதியின்மையானது அதிகரித்து உள்ளது; இதனை பயன்படுத்தி பயங்கரவாதிகள் அமெரிக்காவிற்கு பிரவேசிக்கலாம் எனவும் வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க பத்திரிக்கை செய்தியின் படி இதுபோன்ற பல முக்கிய அம்சங்கள் வரைவு அறிக்கையில் இடம்பெற்று உள்ளது. இருப்பினும் தூதரக பாஸ்போர்ட்கள், நேட்டோ விசாக்கள் மற்றும் சி-2 விசாக்கள் மூலம் அமெரிக்காவிற்குள் வருபவர்களுக்கு எந்தஒரு கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. 

Next Story