மாடல் அழகி கவுரவ கொலை வழக்கு மகன்களிடம் பணம் வாங்கி கொண்டு பல்டி அடித்த பெற்றோர்


மாடல் அழகி கவுரவ கொலை வழக்கு மகன்களிடம் பணம் வாங்கி கொண்டு பல்டி அடித்த பெற்றோர்
x
தினத்தந்தி 28 Jan 2017 5:07 AM GMT (Updated: 2017-01-28T10:37:29+05:30)

பாகிஸ்தான் மாடல் அழகியை கவுரவ கொலை செய்த மகன்களிடம் பணம் வாங்கி கொண்டு சாட்சி அளித்த பெற்றோர்கள் மீது கிரிமினல் வழக்கு.


இஸ்லாமாபாத்

‘பாகிஸ்தானின் கிம் கர்தாஷியன்’ என்று புகழப்பட்டவர், குவாண்டீல் பலோச் (வயது 26). சமூக வலைத்தளங்கள் பிரபலமானார். அந்த புகழை வைத்து, மாடலிங்கும் செய்து வந்தார்.  இவரது கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அதே சமயத்தில், அவர் கலாசாரத்தை இழிவுபடுத்துவதாக பழமைவாதிகள் குற்றம் சாட்டி வந்தனர்.

கடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் அணி இந்தியாவை தோற்கடித்தால் நிர்வாண நடனம் ஆடத்தயாராக இருப்பதாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், கடந்த வருடம் ஜூலை 14ம் தேதி, பலூச் அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார், இது குறித்து விசாரித்த காவல்துறையினர். குடும்பத்திற்கு அவமானம் ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டதாக அவரது அண்ணன் வாசீம், பலூச்சை ஆணவக் கொலை செய்தது தெரியவந்தது. குடும்ப கவுரவத்தை குழிதோண்டி புதைத்ததால், விஷம் கொடுத்து, கழுத்தை நெரித்து பலோச்சை கொன்று விட்டதாக அவருடைய சகோதரர் முகமது வசீமும் ஒப்புக்கொண்டார்.

இது தொடர்பாக போலீசார்  பலூச்சின் 2 சகோதரகள் மீது  கவுரவ கொலை செய்ததாக வழக்குப்பதிவு செய்தனர்.

பலூச்சின் பெற்றோர்கள் முகமது அசீம் மற்றும் அன்வர் பீபி தனது 2 மகன்களும்  தனது மகளை கொலை செய்ததாக கூறினர். ஆனால் வழக்கு விசாரணையின் போது மூத்த மகன், அஸ்லம் ஷாஹீன் கொலை செய்யவில்லை  திடீர் என பல்டி அடித்தனர்.

இதனால் பாகிஸ்தான் போலீசார் கூறும்போது மகன்களிடம் பணம் வாங்கி கொண்டு அவர்கள் இந்த கொலையை மறுத்ததாக போலீசார் குற்றம்சாட்டினர். இதனால் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர போலீசார் முடிவுச் எய்து உள்ளனர்.

குவாண்டீலின் தந்தை அன்வர் ஆசிம், சகோதரியை ஆணவக்கொலை செய்த தன் மகனைகளை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று கூறி இருந்தார், 

Next Story