அமெரிக்காவிற்கு அகதிகள் வருவதற்கு டிரம்ப் தற்காலிக தடை, கிறிஸ்தவர்களுக்கு முன்னுரிமை என உறுதி


அமெரிக்காவிற்கு அகதிகள் வருவதற்கு டிரம்ப் தற்காலிக தடை, கிறிஸ்தவர்களுக்கு முன்னுரிமை என உறுதி
x
தினத்தந்தி 28 Jan 2017 7:24 AM GMT (Updated: 28 Jan 2017 7:24 AM GMT)

அமெரிக்காவிற்கு அகதிகள் வருவதற்கு தற்காலிக தடைவிதிக்கும் உத்தரவில் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபராக பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை டொனால்டு டிரம்ப் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அகதிகள் தொடர்பாக முக்கிய உத்தரவை பிறப்பித்த டிரம்ப், அமெரிக்காவிற்கு அகதிகள் வருவதற்கு 120 நாட்கள் தற்காலிக தடை விதித்தார். புதிய அமைப்பு உருவாக்கப்படும் போது முஸ்லீம் பெரும்பான்மை உள்ள நாடுகளில் உள்ள அகதிகளை விட மத சிறுபான்மையினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார். டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

அண்மையில், கிறிஸ்தவ தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த டொனால்ட் டிரம்ப், ‘சிரியாவில் இருந்துவரும் நீங்கள் முஸ்லிம்களாக இருந்தால் தாராளமாக அமெரிக்காவுக்குள் வரலாம், கிறிஸ்தவர்களாக இருந்தால் வரவே முடியாது என்ற காரணம் நியாயமானது அல்ல. 

எல்லோருடைய தலைகளையும் வெட்டுவதுபோல் கிறிஸ்தவர்களும் சிரியாவில் வெட்டிக் கொல்லப்படுகிறார்கள். எல்லோருக்கும் எல்லா நியாயங்களும் வாய்ப்புகளும் அளிக்கப்பட வேண்டும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் சிரியாவில் இருந்து வந்த அகதிகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கையை 38,901 ஆகவும், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 37,521 ஆகவும் அமெரிக்க குடியுரிமைத்துறை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story