மேரி மாதா-முகமது நபியை இணைத்து சர்ச்சை கருத்து எகிப்து பேராசிரியருக்கு எதிர்ப்பு


மேரி மாதா-முகமது நபியை இணைத்து சர்ச்சை கருத்து எகிப்து பேராசிரியருக்கு எதிர்ப்பு
x
தினத்தந்தி 28 Jan 2017 9:30 AM GMT (Updated: 2017-01-28T15:00:08+05:30)

ஏசுநாதரின் தாயாரான மேரி மாதாவை இஸ்லாமிய இறை தூதரான முகமது நபிகள் சொர்க்கத்தில் திருமணம் செய்வார் என எகிப்து நாட்டை சேர்ந்த இஸ்லாமிய பேராசிரியரின் கருத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.


எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் உள்ள அல் அசார் பல்கலைக்கழகத்தில்  டாக்டர் சலேம் அப்தெல் கலிலி என்பவர் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். சில தினங்களளுக்கு முன்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சலேம் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.

அப்போது, ஏசுநாதரின் தாயாரான மேரி மாதாவை இஸ்லாமியர்களின் இறை தூதரான முகமது நபிகள் சொர்க்கத்தில் திருமணம் செய்வார்.இந்த உலகில் பரிசுத்தமான, பூரண குணநலன்களை கொண்ட 4 பெண்கள் மட்டுமே உள்ளனர்.

ஒன்று, ஏசுநாதரின் தாயாரான மேரி மாதா. இரண்டாவது, எகிப்து நாட்டின் முன்னாள் அரசியல் மற்றும் மதத்தலைவரான பாரோ-வின் மனைவி அயிஷா, மூன்றாவது, முகமது நபிகளின் முதல் மனைவியானகதீஜா, இறுதியாக முகமது நபிகளின் மகளான பாத்திமா ஆகியவர்கள்.

இந்த நால்வரில் முதன்மையாக கருதுபவர் மேரி மாதா தான். இந்த நால்வரும் சிறந்த பெண்மணிகளாக தேர்வு செய்யப்பட்டாலும், மேரி மாதா தான் முகமது நபிகளின் மனைவியாக சொர்க்கத்தில் இருப்பார்.

இஸ்லாமிய இறை தூதர்களுடன் மேரி மாதா தான் முதன் முதலாக சொர்க்கத்தில் நுழைவார்’ என சலேம் பேசியுள்ளார்.இஸ்லாமிய பேராசிரியரின் இக்கருத்தால் எகிப்து கிறித்துவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

மேரி மாதாவின் குணநலன்களை நாங்கள் உண்மையாகவே மதிக்கிறோம். ஆனால், முகமது நபிகளின் மனைவியாக அவரை ஒப்பிட்டு பேசியதை கடுமையாக கண்டிக்கிறோம். பேராசிரியரின் இக்கருத்திற்கு அவர் உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும் என கிறித்துவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story