அடிக்கடி குளிப்பது உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் புதிய ஆய்வில் தகவல்


அடிக்கடி குளிப்பது உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் புதிய ஆய்வில் தகவல்
x
தினத்தந்தி 28 Jan 2017 12:17 PM GMT (Updated: 2017-01-28T17:46:55+05:30)

அதிகம் குளிப்பதால் செரிமானம், நோய் எதிர்ப்பு, இதயம் முதலியவை பாதிக்கப்படலாம் என புதிய ஆய்வில் தெரியவந்து உள்ளது


சுத்தம் சுகம் தரும். ஆகவேதான் காலை எழுந்த உடன் குளித்து, அந்த நாளைத் தொடங்க வேண்டும் என்று நமது அன்னையர் சொல்லக் கேட்டிருக்கிறோம்.

ஆனால் அளவுக்கு அதிகமாக உடலைத் தூய்மை செய்வது உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கலாம் என்கிறது அமெரிக்காவில் ஆய்வு  மூலம் தெரிய வந்து உள்ளது

சருமத்தின் மேல் இருக்கும் நல்ல நுண்ணுயிர்கள், கிருமிகள் ஆகியவை அன்றாட உடலை செயல்பாட்டைச் சீராக வைத்திருக்கின்றன.ஒருவகையில் அவை நமக்கு நோய்கள் வாராமல் பாதுகாக்கின்றன.

அதிகம் குளிப்பதால் அவை அழிக்கப்பட்டு, செரிமானம், நோய் எதிர்ப்பு, இதயம் முதலியவை பாதிக்கப்படலாம். நாம் தினமும் பயன்படுத்தும் சவர்க்காரம், ஷாம்பூ வகைகளும் சருமத்திற்கு மிக முக்கியமான எண்ணெய்ப் பசையையும் நுண்ணுயிர்களையும் அழிக்கின்றன என்பது இதற்கு முன்னால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அமேசான் காட்டுப் பகுதியில் வசிக்கும் ஒரு கிராமத்தினருக்கு, குளிக்கும் பழக்கம் இல்லை.அவர்களது சருமத்தில், எந்தவொரு மனித இனத்துக்கும் இல்லாத நல்ல நுண்ணியிர்கள் காணப்படுவதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அதனடிப்படையில் அண்மை ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.குளிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறும் ஆய்வு, நாம் எத்தனை முறை குளிக்க வேண்டும் என கூறவில்லை.

குளிப்பதா? குளிக்காமல் இருப்பதா? இதை மேலும் ஆராய்ந்தால் தான் விடை காண முடியும். அது வரை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது குளிப்போம்.

Next Story