உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 29 Jan 2017 10:20 PM GMT (Updated: 29 Jan 2017 10:20 PM GMT)

* அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம், டல்லாஸ் நகரில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர், பயல் மோடி.

* அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம், டல்லாஸ் நகரில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர், பயல் மோடி. இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவரது வகுப்பறையில் உள்ள வெள்ளை நிற போர்டில், ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்ற காட்சிகள் ஒளிபரப்பாகின. அப்போது அவர் டிரம்பை தண்ணீர் துப்பாக்கியால் சுட்டு, ‘செத்துப்போ’ என கத்தினார். இது ரகசியமாக படம்பிடிக்கப்பட்டு, சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. இதையடுத்து அந்த ஆசிரியை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

* ஈராக் உள்ளிட்ட 7 நாட்டினருக்கு விசா வழங்க டிரம்ப் தடை விதித்திருப்பது குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று ஈராக் எம்.பி.க்கள் வலியுறுத்தி உள்ளனர்.

* ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை நகரில் ஜெனின் அகதிகள் முகாமில் பணியாற்றிக்கொண்டிருந்த இஸ்ரேல் படையினரை நோக்கி பாலஸ்தீனியர்கள் பைப் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இதில் இஸ்ரேல் படையினர் திருப்பி தாக்கியதில் ஒரு பாலஸ்தீனியர் உயிரிழந்தார்.

* ஐ.எஸ். இயக்க பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கான விரிவான திட்டம் தீட்டுவதற்கு அமெரிக்க ராணுவத்துக்கு ஜனாதிபதி டிரம்ப் 30 நாள் கெடு விதித்துள்ளார்.

* ரஷிய அதிபர் புதினுடன், டிரம்ப் தொலைபேசியில் பேசினார். அப்போது அவர்கள் ஐ.எஸ். இயக்கத்தினரை ஒடுக்குவது பற்றியும், சிரியாவில் மீண்டும் அமைதியான சூழலை ஏற்படுத்துவது குறித்தும் விவாதித்ததாக வெள்ளை மாளிகை கூறுகிறது.

Next Story