மனித பரிணாம வளர்ச்சியில், தொடர்புடைய புதிய கடல் உயிரினம் கண்டுபிடிப்பு


மனித பரிணாம வளர்ச்சியில், தொடர்புடைய புதிய கடல் உயிரினம் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 31 Jan 2017 10:15 AM GMT (Updated: 31 Jan 2017 10:15 AM GMT)

மனித பரிணாம வளர்ச்சியில், 540 மில்லியன் ஆண்டுகளாக தொடர்புடைய 540 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட புதிய கடல் உயிரினம் கண்டுபிடிப்பு

பீஜிங்

மத்திய சீனா கடல்பகுதியில் விஞ்ஞானிகள் புதிய வகையான கடல் உயிரினம் ஒன்றை கண்டறிந்து உள்ளனர்.இந்த் உயிரினம் 540 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்து உள்ளது. என்றும் மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கு இந்த உயிரினம் முக்கிய பங்கு உள்ளதாக இருக்காலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இந்த புதிய உயிரினத்தை இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகதவிஞ்ஞானி சைமன் கான்வே மோரிஸ் மற்றும் அவரது குழுவினர் கண்டறிந்து உள்ளனர்.அதற்கு அவர்கள் பெயரிட்டும் உள்ளனர்.

• பூமியில் 400 கோடி ஆண்டளவில் உயிரினங்கள் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது
• 350 கோடி ஆண்டுகளுக்குமுன் தாவர இலைகள் பச்சிலை பெற்று உணவைத் தயாரிக்கும் தாவர ஒளி இயைபாக்கம் பெற்றன.
• 260 கோடி ஆண்டளவில் நீரிலுள்ள உயிரணுச் சவ்வு தரையிலும் தோன்றின.
• 230 கோடி ஆண்டளவில் உயிரகம் செறிந்த வளிமண்டலம் தோன்றியது.            
• 100 கோடி ஆண்டுகளுக்குமுன் காளான்கள் தோன்றின.
• தாவரம் 70 கோடி ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றன.
• 53 கோடி ஆண்டுகளுக்குமுன் கடல் மீன்கள் முள்ளெலும்புடன் தோன்றின.        
• 45 கோடி ஆண்டுகளுக்குமுன் ஒட்டுத்தோடுடைய இணைப்புடலி உயிரினங்களின் ஒரு வகைப் பிராணி (Arthropods)  நீரிலிருந்து நிலத்தில் வாழத் தொடங்கியது.        
• 38 கோடி ஆண்டுகளுக்குமுன் நாற்கால் (Tetrapods)  பிராணிகள் மீனிலிருந்து தோன்றின. இவை நீரிலிருந்து தலையை வெளியில் நீட்டிச் சுவாசிக்கத் தொடங்கின. இதேகாலப்பகுதியில் முதலாவது முதுகெலும்பு பொருந்திய தரை விலங்குகளும் தோன்றின.
• 36 கோடி ஆண்டுகளின்முன் தாவரங்கள் விதைகளைத் தம் விருத்திக்காகத் தந்துதவின.
• 31 கோடி ஆண்டுகளில் பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன தோன்றின.       
• 23 கோடி ஆண்டுகளின்முன் ஊர்ந்து செல்லும் மாபெரும் விலங்குகள் (Dinosaurs) தோன்றின.          
• 15 கோடி ஆண்டுகளில் பழமையானதும் பறப்பனவற்றிற்கும் ஊர்வனவற்றிற்கும் இடைப்பட்ட ஓர் அதிசயப் பறவை (Archaeopteryx)  இனம் தோன்றியது.
• 7 கோடி ஆண்டுக் காலப்பகுதியில்  பாலூட்டிகள் பெரிதாக வளர்ந்தன.          
• 3 கோடி ஆண்டளவில்  சில பாலூட்டிகள் டொல்வின் மீன்களாகக் கடலுக்குத் திரும்பின.         
• 20 லட்சம் ஆண்டளவில் முதல் மனிதன் ஆபிரிக்காவில் தோன்றினான்.       
• எட்டு  (08)  இலட்சம்  ஆண்டுகளுக்குமுன்  நெருப்பின் பிரயோகமும் அதைக் கட்டுப்படுத்தும் ஆற்றலையும் மனிதன் பெற்றுக்கொண்டான்.
• இரண்டு (02) இலட்சம் ஆண்டளவில் உறுப்பியல் சார்ந்த அமைப்பியலான புது நாகரிகப் பண்பாடுடைய மனிதன் ஆபிரிக்காவில் தோன்றினான்.    

Next Story