அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அறிவிப்புகள் கவலை அளிக்கிறது-டொனால்ட் டஸ்க்


அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அறிவிப்புகள் கவலை அளிக்கிறது-டொனால்ட் டஸ்க்
x
தினத்தந்தி 31 Jan 2017 1:52 PM GMT (Updated: 2017-01-31T19:22:49+05:30)

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அறிவிப்புகள் அனைத்தும் கவலை அளிக்கிறது என்று ஐரோப்பிய நாடுகள் கூட்டமை தலைவர் டொனால்ட் டஸ்க் கூறியுள்ளார்.

லண்டன்,

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்று 10 நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள் அவர் வெளியிடும் அதிரடி அறிவிப்புகள் உலக நாடுகள் அனைத்தையும் கதிகலங்க செய்துள்ளன.

இஸ்லாமியர் பெரும்பான்மையாக உள்ள 7 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை, மற்ற நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அமெரிக்கா செல்ல கடும் கட்டுப்பாடுகள் என கடந்த 10 நாட்களில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறார் டிரம்ப்.

இந்நிலையில் 7 முஸ்லீம் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அமெரிக்காவில் அனுமதியில்லை மற்றும் ஹச்1பி விசாவில் மாற்றம் உள்ளிட்ட  
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அறிவிப்புகள் அனைத்தும் வருத்தம் அளிக்கக்கூடிய வகையில் உள்ளது என்று ஐரோப்பிய நாடுகள் கூட்டமை தலைவர் டொனால்ட் டஸ்க் கூறியுள்ளார்.

Next Story