ஊழல் வழக்கு எதிரொலி பெரு முன்னாள் அதிபருக்கு சர்வதேச பிடிகட்டளை கோர்ட்டு அதிரடி


ஊழல் வழக்கு எதிரொலி பெரு முன்னாள் அதிபருக்கு சர்வதேச பிடிகட்டளை கோர்ட்டு அதிரடி
x
தினத்தந்தி 10 Feb 2017 10:15 PM GMT (Updated: 2017-02-11T00:53:54+05:30)

தென் அமெரிக்க நாடான பெரு நாட்டில் 2001–2006 ஆண்டுகளில் அதிபராக இருந்தவர் அலெஜாண்ட்ரோ டோலிடோ.

லிமா,

இவர் பிரேசில் நாட்டை சேர்ந்த கட்டுமான நிறுவன அதிபர் ஓடிபிரெச்ட் என்பவரிடம் 20 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.136 கோடி) லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அலெஜாண்ட்ரோ டோலிடோ, தனது பதவியை தவறாக பயன்படுத்தி, நெடுஞ்சாலை திட்டங்களை டெண்டர் விடுவதில் ஊழல் புரிந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த பெரு நாட்டின் நீதிபதி ரிச்சர்ட் கன்சப்சியன், அலெஜாண்ட்ரோ டோலிடோவை கைது செய்வதற்கு சர்வதேச பிடிகட்டளை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

அலெஜாண்ட்ரோ டோலிடோ, தன் மீதான ஊழல் வழக்கில் ஆஜராகாமல் தப்பி ஓடிவிட்டார். அவர் பிரான்ஸ் நாட்டில் இருப்பதாக தெரிய வந்தது.

அவர் கைது செய்யப்பட்டு விசாரணையை எதிர்கொண்டு, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு இருப்பதாக அரசு வக்கீல் ஹாமில்டன் காஸ்ட்ரோ தெரிவித்தார்.


Next Story