நியூசிலாந்தில் கிறிஸ்ட் சர்ச் போர்ட் குன்றுகளில் பயங்கர காட்டு தீ


நியூசிலாந்தில் கிறிஸ்ட் சர்ச் போர்ட் குன்றுகளில் பயங்கர காட்டு தீ
x
தினத்தந்தி 16 Feb 2017 4:17 PM GMT (Updated: 16 Feb 2017 4:17 PM GMT)

நியூசிலாந்தில் உள்ள கிறிஸ் சர்ச் போர்ட் குன்றுகளில் பயங்கர காட்டுத்தீ பரவியதால் 11 வீடுகள் எரிந்து சாம்பலாகின.

வெலிங்டன்,

நியூசிலாந்தின் கிறிஸ் சர்ச் போர்ட் குன்றுகள் உள்ளது. இந்த குன்றுகள் சுமார் 4400 ஏக்கர் பரப்பளவு உள்ளது. இந்நிலையில் இந்த குன்றுகளில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. தீயை அணைக்க ஹெலிகாப்டர் மூலம் தண்ணீரை கொட்டி காட்டுத்தீயை அணைக்க முயன்றனர். இவ்வாறு தண்ணீரை கொட்டி கொண்டு தீயை அணைக்க முயன்று கொண்டிருக்கும் போது ஹெலிகாப்டர் குன்று ஒன்றில் மோதி நொறுங்கியது. இதனை இயக்கிய விமானியும் காட்டுத்தீயில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த காட்டுத்தீயில் குன்றுகள் ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்து 11 வீடுகள் எரிந்து சாம்பாலாகின. நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடுமையான காற்று வீசுவதால் காற்றின் ஈரப்பதம் குறைந்து வருவதால் தீயை அணைப்பது கடுமையாக உள்ளது என்று அந்நாட்டில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

Next Story