உலகைச்சுற்றி


உலகைச்சுற்றி
x
தினத்தந்தி 17 Feb 2017 7:15 PM GMT (Updated: 17 Feb 2017 7:14 PM GMT)

வெனிசூலாவில் அரசுக்கு எதிராக கலகங்களை தூண்டிய எதிர்க்கட்சி தலைவர் லியோபோல்டோ லோபெஸ்சுக்கு 14 ஆண்டு சிறைத்தண்டனை

* ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதிக்கு ஆதரவாக ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்களை எதிர்த்து சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் சண்டையிட்டு வருகின்றன. அங்கு அமீரகத்தை சேர்ந்த ஒரு வீரர் கொல்லப்பட்டுள்ளார். மற்றொரு வீரர் மாரடைப்பால் இறந்து விட்டார் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

* வெனிசூலாவில் அரசுக்கு எதிராக கலகங்களை தூண்டிய எதிர்க்கட்சி தலைவர் லியோபோல்டோ லோபெஸ்சுக்கு 14 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரை விடுதலை செய்யவேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வலியுறுத்திய நிலையில், லோபெஸ் மீதான தண்டனையை அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு நேற்று உறுதி செய்துள்ளது.

* ஈரான், ஈராக் உள்ளிட்ட 7 நாட்டினர் அமெரிக்கா வர ஜனாதிபதி டிரம்ப் பிறப்பித்த உத்தரவை சியாட்டில் கோர்ட்டு நிறுத்தி வைத்தது. அதை எதிர்த்து டிரம்ப், சான்பிரான்சிஸ்கோவில் உள்ள 9-வது மேல்முறையீடு சர்க்கியூட் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். சியாட்டில் கோர்ட்டு உத்தரவை தற்காலிகமாக உறுதி செய்துள்ளது. இதற்கிடையே டிரம்ப் புதிய பயண தடை உத்தரவு ஒன்றை பிறப்பிப்பதாக அறிவித்துள்ளதால், இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கையை மேல்முறையீடு சர்க்கியூட் கோர்ட்டு நிறுத்திவைத்துள்ளது.

* அமெரிக்காவில் விமானத்தில் சக பெண் பயணி ஒருவரை பாலியல் தொல்லை செய்தது தொடர்பான வழக்கில் வீரபத்ரராவ் குணம் என்கிற இந்தியர் சிக்கியுள்ளார். இது தொடர்பாக தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை, அவர் கோர்ட்டில் ஒப்புக்கொண்டார். அவருக்கு 3 மாதம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். 

Next Story