உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 18 Feb 2017 7:42 PM GMT (Updated: 2017-02-19T01:12:35+05:30)

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தொடர்ந்து ஊடகங்களுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார்.

* அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தொடர்ந்து ஊடகங்களுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் ‘ஊடகங்கள், அமெரிக்க மக்களின் எதிரிகள்’ என்று டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

* திபெத் புத்த மதத்தலைவர் தலாய் லாமாவை புதிய கல்வி ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசுமாறு அழைக்க அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் (சாண்டிகோ) முடிவு செய்துள்ளது. ஆனால் இது தங்களுக்கு செய்யப்பட்ட அவமரியாதை என சீன மாணவர்கள் கருதி சர்ச்சையை கிளப்பி உள்ளனர்.

* அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம் பலத்த சூறாவளி, கன மழையால் பெரிதும் பாதித்துள்ளது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விமான சேவை முடங்கியது.

* செவான் வழிபாட்டுத்தலத்தில் நடந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பாதுகாப்பு படைகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

* பாகிஸ்தானில் இந்து திருமணத்தை சட்டபூர்வமாக்கும் சட்ட மசோதா, பாராளுமன்ற மேல்சபையில் நேற்று முன்தினம் நிறைவேறியது. ஏற்கனவே இந்த மசோதா, கீழ் சபையின் ஒப்புதலை பெற்று விட்டது.

* தென்கொரியாவில் அதிபர் பார்க் கியுன் ஹையின் நெருங்கிய தோழி, சோய் சூன் சில்லுக்கு லஞ்சம் கொடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டார். அவரை கைகளில் விலங்கிட்டு, கயிறு கட்டி விசாரணைக்கு அழைத்து சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Next Story