தென்சீனக்கடலில் அமெரிக்க கடற்படை ரோந்துப்பணி தொடங்கியது


தென்சீனக்கடலில் அமெரிக்க கடற்படை ரோந்துப்பணி தொடங்கியது
x
தினத்தந்தி 19 Feb 2017 8:45 PM GMT (Updated: 2017-02-20T00:56:29+05:30)

சீன நாட்டின் தென்பகுதியில் உள்ள தென்சீனக்கடல் வழியே உலகின் மூன்றில் ஒரு பகுதி கப்பல் போக்குவரத்து நடைபெறுகிறது.

வாஷிங்டன்,

இந்த தென் சீனக்கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கு செயற்கை தீவுகளையும் உருவாக்கி உள்ளது.

இந்த தென்சீனக்கடலில் எங்களுக்கும் உரிமை உண்டு என்று பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனை, தைவான், மலேசியா, கம்போடியா, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகள் கூறி வருகின்றன.

சீனாவின் மேலாதிக்க நிலைக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

அதே நேரத்தில், தென்சீனக்கடல் விவகாரத்தில் தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக அமெரிக்கா செயல்படுவதாகக்கூறி, அந்த நாட்டுக்கு கடந்த 15–ந் தேதி சீனா கடும் கண்டனம் தெரிவித்தது.

அந்த நிலையில் சர்ச்சைக்குரிய தென்சீனக்கடல் பகுதியில் அமெரிக்க கடற்படை ரோந்துப்பணியை தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் தொடங்கியுள்ள இந்த ரோந்துப்பணியில், யுஎஸ்எஸ் காரல்வின்சன் விமானம் தாங்கி போர்க்கப்பல், யுஎஸ்எஸ் வேனி இ மேயர் நாசகார கப்பல், கேரியர் ஏர் விங் விமானம் போன்றவை ஈடுபட்டுள்ளன.  இதை அமெரிக்க கடற்படை செய்திக்குறிப்பு ஒன்றில் கூறி உள்ளது.

தென்சீனக்கடலில் அமெரிக்க கடற்படையின் ரோந்துப்பணியால் கொரிய தீபகற்ப பகுதியில் புதிய பதற்றம் நிலவுகிறது.


Next Story