ஆஸ்திரேலியாவில் வணிக வளாகத்தின் மீது விமானம் மோதி விபத்து: 5 பேர் பலி


ஆஸ்திரேலியாவில் வணிக வளாகத்தின் மீது  விமானம் மோதி விபத்து: 5 பேர் பலி
x
தினத்தந்தி 21 Feb 2017 5:46 AM GMT (Updated: 2017-02-21T11:15:55+05:30)

ஆஸ்திரேலியாவில் வணிக வளாகம் மீது சிறிய ரக விமானம் மோதி விபத்துக்குள்ளனதில் 5 பேர் பலியாகினர்.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவின் பெரும் நகரங்களில் ஒன்றான மெல்போர்னில் இலகு ரக விமானம் ஒன்று அங்குள்ள வணிக வளாகம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணித்த 5 பேர் பலியாகினர்.

டாஸ்மானியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே உள்ள கிங் தீவுகளை சுற்றிப் பார்ப்பதற்காக, 5 சுற்றுலாப்பயணிகளை விமானம் ஏற்றிச்சென்றதாக கூறப்படுகிறது. விமானம் வணிக வளாகத்தில் மோதியதில், பெரும் தீ விபத்து ஏற்பட்டது. புகை மூட்டமும் சூழ்ந்ததால் மக்கள் பீதி அடைந்தனர்.  வணிக வளாகம் திறக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

Next Story