விண்வெளி நிலையத்தை முற்றுகையிட்ட வேற்றுகிரகவாசிகள் நாசா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ


விண்வெளி நிலையத்தை முற்றுகையிட்ட வேற்றுகிரகவாசிகள்  நாசா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
x
தினத்தந்தி 21 Feb 2017 6:40 AM GMT (Updated: 21 Feb 2017 6:40 AM GMT)

சர்வதேச விண்வெளி நிலையத்தை அடையாளம் தெரியாத 6 பறக்கும் பொருள்கள் வட்டமிட்டு சுற்றிய சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாஷிங்டன்

பூமியிலிருந்து 418 கி.மீ. உயரத்தில், 100 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 6 லட்சத்து 10 ஆயிரம் கோடி) மதிப்பில், மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டு, அதில் விண்வெளி ஆராய்ச்சி பணிகள் நடந்து வருகின்றன.

அதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கி இருந்து அந்த பணிகளை செய்து வருகின்றனர்.இந்த் விண் வெளி நிலையத்தை அடையாளம் தெரியாத 6 பறக்கும் பொருள்கள் வட்டமிட்டு சுற்றிய சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நாசா வெளியிட்டிருந்த வீடியோவின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. சம்பவம் நிகழும் போது நாசா திடீரென வீடியோவை துண்டித்தது குறிப்பிடத்தக்கது.

வீடியோவில், சர்வதேச விண்வெளி நிலையத்தை அடையாளம் தெரியாத 6 பறக்கும் பொருள்கள் வட்டமிட்டு சுற்றுகிறது. இதுகுறித்து Team 10-யின்  ஹண்டர் டெய்லர் குலோக்னர் கூறியதாவது, சர்வதேச விண்வெளி நிலையத்தில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் தோன்றியதை நான் கண்டறிந்தேன்.

அது விண்வெளி நிலையத்தை நோக்கி பயணித்து வந்தது, அந்த ஆறு பறக்கும் பொருளும் மிக பெரியதாக இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இதுகுறித்து நாசா கூறியதாவது:-  கமிராவின் லென்ஸில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவ்வாறு தோன்றியுள்ளது, மற்றப்படி ஏலியன்ஸ் கிடையாது என தெரிவித்துள்ளது.



Next Story