உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக இந்தியா இருந்து வருகிறது.


உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக இந்தியா இருந்து வருகிறது.
x
தினத்தந்தி 21 Feb 2017 11:48 AM GMT (Updated: 21 Feb 2017 11:47 AM GMT)

உலக அளவில் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக இந்தியா இருந்து வருகிறது.இந்தியாவே அதிக ஆயுதங்கள் வாங்குகிறது.

புதுடெல்லி

உலக அளவில் ஆயுதங்களின் விற்பனை அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டிருப்பதாக ஸ்டாக்கோம் அனைத்துலக அமைதி ஆய்வுக் கழகம் தனது அறிக்கை தெரிவித்துள்ளது.

இதற்கு ஆசியாவிலும் மத்திய கிழக்கிலும் ஆயுதங்களுக்கான தேவை அதிகரித்திருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது. கடந்த ஐந்தாண்டில் அதிகமான ஆயுதங்கள் விற்பனை அதிகரித்து உள்ளதாக அந்த அறிக்கை கூறியது.

கெடுபிடிப் போருக்குப் பிறகு எந்தவொரு ஐந்தாண்டு காலக் கட்டத்திலும் இல்லாத உச்சத்தைக் கடந்த ஐந்தாண்டு கண்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது. கடந்த ஐந்தாண்டில் சீனா அதிகமான ஆயுதங்களை விற்பனை செய்து உள்ளது. அந்தக் காலக்கட்டத்தில் ஏற்றுமதியான மொத்த ஆயுதங்களில் 6.2 சதவீதத்தை  சீனா ஏற்றுமதி செய்துள்ளது.
அதன் வழி பிரான்சையும் ஜெர்மனியையும் அது விஞ்சிவிட்டதாகவும் அறிக்கை குறிப்பிட்டது.

உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்கு மதியாளராக இந்தியா இருந்து வருகிறது. 2012-2016 ஆம் ஆண்டுகலில் உலகில் மொத்தம்  விறபனையான ஆயுதங்களில் இந்தியா மாட்டும் 13 சதவீதம் வாங்கி உள்ளது.இந்தியா  ரஷ்யா,அமெரிக்க, ஐரோப்பா, இஸ்ரேல், மன்ற்ரும் தென் கொரியா  ஆயுத தொழில் நுட்பங்களை சார்ந்து உள்ளது.

சவுதி அரேபியா 2 வது இடத்தில் உள்ளது.2007-1 ஆண்டுகளை ஒப்பிடும் போது அந்த நாடு 212 சதவீதம் அதிகமான ஆயுதங்களை வாங்கி உள்ளது.கத்தார். கடந்த முறையை விட 245 சதவீதம் அதிகமான ஆயுதங்களை வாங்கி உள்ளது.

உலக ஆயுத  ஏற்றுமதியில் ரஷ்யா 23 சதவீதம் உள்ளது. ரஷ்யா தனது 70 சதவீத ஆயுதங்களை இந்தியா, வியட்நாம், சீனா, அல்ஜீரியாவுக்கு விற்பனை செய்து உள்ளது.

உலகில் அதிக அளவு ஆயுதங்கள் விற்பனை செய்யும் நாடாக அமெரிக்க உள்ளது. உலகில் விற்பனை செய்யப்பட்ட ஆயுதங்களில் 21 சதவீதம் அமெரிக்காவால் விற்பனை செய்யப்பட்டதாகும்.அதிகமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கே அது ஆயுதங்கள் சப்ளை செய்து உள்ளது.

Next Story