லா ரீயூனியன் கடலோர பகுதியில் சர்பிங் செய்த வாலிபர் சுறா மீன் தாக்கியதில் மரணம்


லா ரீயூனியன் கடலோர பகுதியில் சர்பிங் செய்த வாலிபர் சுறா மீன் தாக்கியதில் மரணம்
x
தினத்தந்தி 21 Feb 2017 3:58 PM GMT (Updated: 2017-02-21T21:28:02+05:30)

இந்திய பெருங்கடல் தீவு பகுதியில் சர்பிங் செய்த வாலிபர் சுறா மீன் தாக்கியதில் மரணம் அடைந்துள்ளார்.

லா ரீயூனியன்,

இந்திய பெருங்கடல் பகுதியில் லா ரீயூனியன் என்ற தீவு உள்ளது.  கடந்த 2011ம் ஆண்டில் இருந்து இது பிரான்ஸ் எல்லைக்கு உட்பட்டு உள்ளது.

இந்நிலையில், 26 வயது வாலிபர் ஒருவர் லா ரீயூனியன் தீவில் அமைந்த கடலோர பகுதியில் சர்பிங்கிற்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.  சர்பிங் என்பது நீண்ட பலகை ஒன்றில் நின்று கொண்டு கடல் அலையின் வேகத்திற்கு ஏற்ப பயணித்து கரையினை அடையும் விளையாட்டுகளில் ஒன்று.

இந்நிலையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவரை சுறா மீன் ஒன்று தாக்கியுள்ளது.  இதில் அவர் மரணம் அடைந்துள்ளார்.

இவர் லா ரீயூனியன் பகுதியில் சுறா மீன் தாக்கி பலியான 8வது நபராவார்.

Next Story