மீண்டும் தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் பாலியல் பலாத்காரங்கள்


மீண்டும் தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் பாலியல் பலாத்காரங்கள்
x
தினத்தந்தி 22 Feb 2017 7:40 AM GMT (Updated: 2017-02-22T13:10:11+05:30)

தலைநகர் டெல்லியில் லிப்ட் கேட்ட பெண், ஓடும் காரிலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி

டெல்லியில் நள்ளிரவில் 24 வயது பெண் ஒருவர் தனது உறவினருடன் ஓட்டல் ஒன்றுக்குச் சென்றுவிட்டு. பின்னர்  வீடு திரும்பினார்கள். வழியில் பேருந்து, டாக்ஸி எதுவும் கிடைக்காததால்  அவ்வழியே வந்த கார் ஒன்றில் அந்த பெண் லிப்ட் கேட்டுள்ளார்.

லிப்ட் கொடுக்க வந்த நபர், அந்த பெண்ணை மட்டும் காரில் ஏற்றிக் கொண்டு, வேகமாகச் சென்றுள்ளார். இதைப் பார்த்ததும் அவரது உறவினர் அதிர்ச்சி அடைந்து, காரை பின்தொடர்ந்தார். எனினும், அங்கிருந்து மறைவிடத்திற்கு காரை ஓட்டிச் சென்ற டிரைவர், அந்த பெண்ணை, 2 முறை தொடர்ச்சியாகக் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு , அவரிடம் இருந்த ஐபோன் மற்றும் ரூ.600  பணத்தி பறித்து கொண்டு தப்பியோடி விட்டார்.

பின்னாடியே வந்த உறவினர் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு, அருகில் உள்ள போலீசாரிடம் புகார் கொடுத்தனர். இதுபற்றி அலிப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து  வாலிபர் ஒருவரை கைது செய்து உள்ளனர்.

இதுபோல் கேஎன் கட்ஜூ மார்க் பகுதியில்ன்ப் ரோகிணி செக்டாரில்  இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யபட்டு உள்ளனர்.

 4 மற்றும் 7 வயது சிறுமிகள் இந்த் கோர சம்பவத்திற்கு பலியாகி உள்ளனர்.2 சிறுமிகளும் பாபா பீம் ராவ் அம்பேதகார் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்ட்டு உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Next Story