நடுவானில் பறந்த இந்திய பயணிகள் விமானத்தை எச்சரித்த போர் விமானம்


நடுவானில் பறந்த இந்திய பயணிகள் விமானத்தை எச்சரித்த போர் விமானம்
x
தினத்தந்தி 23 Feb 2017 5:18 AM GMT (Updated: 23 Feb 2017 8:57 AM GMT)

நடுவானில் சுமார் 345 பேருடன் பறந்த இந்திய பயணிகள்விமானத்தை எச்சரித்த போர் விமானம் பரபரப்பு வீடியோ

கடந்த 16-ம் தேதி மும்பையில் இருந்து சுமார் 345 பேருடன் லண்டன் நகரை நோக்கி புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் போயிங் விமானம், பிராகுவே நகர வான் எல்லையை கடந்து, ஜெர்மனி நாட்டின் வான் எல்லைக்குள் நுழைந்தது.

பிராகுவே நாட்டின் வான் எல்லையை கடக்கும்போது, அடுத்த வான் எல்லைக்குள் நுழையும்போது விமான நிலைய கட்டுப்பாடு ஒரு ஜெட் ஏர்வேஸ் போயிங் விமானத்தை ஓட்டிவந்த விமானி தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ளும் தொலைத்தொடர்பு கருவியை சரியான அலைவரிசையில் (frequency) வைக்காமல்,சற்றே மாற்றி வைத்துள்ளதை கவனிக்காமல் சுமார் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தார்.

முன் அனுமதி பெறாமல் தங்கள் நாட்டு வான் எல்லைக்குள் பறந்த அந்த பயணிகள் விமானத்தை தொலைத்தொடர்பு கருவியின் மூலம் தொடர்பு கொள்ள முயன்ற கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளின் பெருமுயற்சி பலன் அளிக்கவில்லை.

எந்த விதமான அறிவிப்புமின்றி தொலைத்தொடர்பு இணைப்பு பெறாமலும் சுமார் அரை மணி நேரமாக அந்த விமானம் சர்வ சுதந்திரமாக பறந்து கொண்டிருந்தது.

சர்வதேச வான் எல்லை விதிமுறைகளை மதிக்காமல் பறக்கும் அந்த பயணிகள் விமானத்தை எச்சரிப்பதற்காக நடு வானில் விமானங்களை சுட்டு வீழ்த்தும் ஆற்றல்மிக்க போர் விமானம் (Luftwaffe Typhoons) மின்னல் வேகத்தில் சீறிப் புறப்பட்டு, பின்தொடர்ந்தது.

அந்த போர் விமானத்துக்கு துணையாக மற்றொரு போர் விமானமும் அனுப்பி வைக்கப்பட்டது, சில நிமிடங்களுக்குள் அந்தப் பயணிகள் விமானத்தை நெருங்கிவிட்ட போர் விமானத்தின் விமானி, சர்வதேச வான் எல்லை பாதுகாப்பு விதிமுறைகளின்படி, பயணிகள் விமானத்தின் இடதுபக்க விமானி ஜன்னலை நெருங்கி தனது விமானத்தின் இறக்கையை லேசாக பக்கவாட்டில் அசைத்து காட்டினார்.

இந்த இரு விமானங்களையும் பின்தொடர்ந்து வந்த மற்றொரு விமானத்தின் விமானி, ஏதோ விபரீதம் நேரப் போகிறது என்ற எண்ணத்தில் இந்த காட்சிகளை வீடியோவாக படம் பிடித்துள்ளார்.

போர் விமானத்தின் எச்சரிக்கையை பக்கவாட்டு ஜன்னல் வழியாக பார்த்து எச்சரிக்கை அடைந்த ஜெட் ஏர்வேஸ் விமானி, உடனடியாக உஷாராகி, தொலைத்தொடர்பு கருவியை கவனித்தபோது, சரியான அலைவரிசையை தேர்வு செய்யாத தனது தவறை உணர்ந்து, அதை சரிசெய்துள்ளார்.

கவனக்குறைவாக இருந்த காரணத்துக்காக அந்த ஜெட் ஏர்வேஸ் விமானி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

தற்போது, இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.


Next Story