உலக அளவில் இந்தியாவில் அதிகளவு தற்கொலைகள் ஆய்வில் தகவல்


உலக அளவில் இந்தியாவில்  அதிகளவு தற்கொலைகள் ஆய்வில் தகவல்
x
தினத்தந்தி 24 Feb 2017 6:54 AM GMT (Updated: 2017-02-24T12:24:27+05:30)

உலக அளவில், இந்தியர்கள்தான் அதிகளவில் தற்கொலை செய்துகொள்வதாக, உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதுடெல்லி

உலக சுகாதார நிறுவனம் ய்வு ஒன்றை நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

அதில், உலகம் முழுவதும் 32 கோடிக்கும் அதிகமான மக்கள், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், தென்கிழக்காசிய மற்றும் பசிபிக் மேற்கத்திய பிராந்தியங்களைச் சேர்ந்த நாடுகளில்தான் அதிகளவு மக்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், இந்த பிராந்திய நாடுகளில்தான் அதிகளவு தற்கொலைகளும் நடைபெறுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களில் பலர் நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். குறிப்பாக, இந்தியாவில்தான் அதிகளவு தற்கொலைகள் நடைபெறுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு தொடங்கி, 2015ம் ஆண்டு வரையான காலத்தில், இந்திய அளவில் 5.66 கோடி தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. இவர்களில், 3 கோடி பேர் மன அழுத்தம், மனநலன் பாதிப்பு போன்ற காரணங்களால் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

ஆண்களே அதிகளவு மன அழுத்தத்திற்கு ஆள்படுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. மனநலன் தொடர்பான சிகிச்சைகள், விழிப்புணர்வு திட்டப் பணிகள் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் அதிகளவு செயல்படுத்தப்பட வேண்டும் என்று, உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Next Story