உலகைச்சுற்றி


உலகைச்சுற்றி
x
தினத்தந்தி 27 Feb 2017 7:58 PM GMT (Updated: 2017-02-28T01:27:44+05:30)

சீனாவின் மூத்த தூதரக அதிகாரியான யாங் ஜீச்சி 2 நாள் பயணமாக அமெரிக்கா சென்றார்.

* தென்கொரியாவில் அதிபர் பார்க் கியுன் ஹை மீதான ஊழல்குற்றச்சாட்டின் சிறப்பு விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) முடிவுக்கு வரும் நிலையில், விசாரணை நாட்களை மேலும் நீட்டிக்க முடியாது என பொறுப்பு அதிபர் ஹாங் குவான் குவாய் திட்டவட்டமாக கூறிவிட்டார்.

* சீனாவின் மூத்த தூதரக அதிகாரியான யாங் ஜீச்சி 2 நாள் பயணமாக அமெரிக்கா சென்றார். அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றுக்கொண்டபின் சீனாவின் உயர் அதிகாரி ஒருவர் அமெரிக்கா சென்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.

* அமெரிக்காவில் விரைவில் தாக்கல் செய்யப்பட இருக்கும் பட்ஜெட்டில் ராணுவத்திற்கு அதிக அளவு நிதி ஒதுக்க டிரம்ப் திட்டமிட்டு இருப்பதாக வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகள் இருவர் தெரிவித்தனர். அதே சமயம் குறிப்பிட்ட சில துறைகளுக்கு 30 சதவீதம் வரை நிதியை குறைக்கவும், ராணுவம் சாராத பல்வேறு திட்டங்களை நீக்கவும் திட்டம் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

* தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு நகரங்களில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக இதுவரை 3 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 19 பேர் மாயமாகி இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Next Story