இலங்கையில் 5 கைதிகள், 2 சிறைக்காவலர்கள் சுட்டுக்கொலை


இலங்கையில்  5 கைதிகள், 2 சிறைக்காவலர்கள் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 27 Feb 2017 9:00 PM GMT (Updated: 2017-02-28T01:33:16+05:30)

கொழும்புவில் மிகப்பெரிய சிறை உள்ளது. இந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்த 5 கைதிகளுக்கு நேற்று கோர்ட்டில் விசாரணை.

கொழும்பு,

இலங்கை தலைநகர் கொழும்புவில் மிகப்பெரிய சிறை உள்ளது. இந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்த 5 கைதிகளுக்கு நேற்று கோர்ட்டில் விசாரணை இருந்தது. இதற்காக சிறைக்காவலர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கைதிகள் 5 பேரையும் ஒரு பஸ்சில் ஏற்றிக்கொண்டு சிறையில் இருந்து கோர்ட்டுக்கு புறப்பட்டனர்.

குறிப்பிட்ட ஒரு இடத்துக்கு அருகே சென்றுகொண்டிருந்தபோது மர்ம கும்பல் ஒன்று அந்த பஸ்சை வழிமறித்தது. போலீசார் என்ன நடக்கின்றது என்று சுதாரிப்பதற்குள் அந்த மர்மநபர்கள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு, கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இந்த திடீர் தாக்குதலில் கைதிகள் 5 பேரும், சிறைக்காவலர்கள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் போலீஸ் அதிகாரிகள் 9 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட கைதிகளுக்கும் மற்றொரு கும்பலுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் இருந்து வந்தாகவும், அந்த எதிர்தரப்பு கும்பல்தான் இந்த தாக்குதலை நடத்தியதாகவும் போலீசார் தெரிவித்தனர். 

Next Story