சிரியாவில் தற்கொலைப்படை தாக்குதலில் 44 பேர் பலி


சிரியாவில் தற்கொலைப்படை தாக்குதலில் 44 பேர் பலி
x
தினத்தந்தி 11 March 2017 4:43 PM GMT (Updated: 2017-03-11T22:12:55+05:30)

சிரியாவில் தற்கொலைப்படை தாக்குதலில் 44 பேர் பலியாகினர்.

பெய்ரூட்,

சிரியாவில் பாப் அல்–சாகிர் பகுதியில் உள்ள வழிப்பாட்டு தலத்திற்கு ஒரு பஸ்சில் பக்தர்கள் நேற்று சென்று கொண்டு இருந்தனர். பழைய டமாஸ்கஸ் நகரில் உள்ள பஸ் நிலையம் அருகே சென்றபோது, தற்கொலைப்படை பயங்கரவாதி திடீரென வெடிகுண்டை வெடிக்கச்செய்தார். இதில் பஸ்சில் இருந்த பயணிகள் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலர் பலியாகினர்.

இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் மற்றொரு பஸ்சில் தற்கொலைப்படை பயங்கரவாதி வெடிகுண்டை வெடிக்கச்செய்தார். இந்த 2 சம்பவங்களிலும் 44 பேர் பலியாகினர். 120–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் ஈராக்கைச் சேர்ந்தவர்கள்.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பு ஏற்கவில்லை.

Next Story