பாகிஸ்தானில் 19 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு

பாகிஸ்தானில் 19 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு
x
தினத்தந்தி 13 March 2017 11:07 AM GMT (Updated: 2017-03-13T16:37:20+05:30)

பாகிஸ்தானில் 19 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு தகவல்துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

இஸ்லாமாபாத்

பாகிஸ்தானில் 19 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு தகவல்துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

பாகிஸ்தானில் 19 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு தகவல்துறை இணையமச்சர் மரியம் அவுரங்கசீப்பும், இராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூரும் இணைந்து நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. இக்கணக்கெடுப்பில் சுமார் 2,00,000 இராணுவ வீரர்கள் பாதுகாப்பு வழங்குவதோடு தகவல்களை சரி பார்க்கவும் உதவி புரிவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

பல்வேறு அரசுத்துறைகளிலிருந்து சுமார் 1,18,918 பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். ஒவ்வொரு கணக்கெடுப்பாளர்களுடனும் ஒவ்வொரு இராணுவ வீரரும் உடன் செல்வார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த ஆறாவது மக்கள்தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்றும் இதற்காக பாகிஸ்தான். ரூ. 18.5 பில்லியன் ஒதுக்கி உள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story